Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அநீதி ( பட விமர்சனம்)

படம்  : அநீதி

நடிப்பு: அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா, அர்ஜுன் சிதம்பரம், பரணி, ஷா ரா, டி.சிவா, அறந்தாங்கி நிஷா, சாந்தா தனஞ்செயன்

தயாரிப்பு: அர்பண் பாய்ஸ்

:இசை: ஜீவி. பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு: எட்வின் சாகே

இயக்கம்: ஜி.வசந்தபாலன்

பி  ஆர் ஒ. நிகில் முருகன்

உணவு டெலிவரி செய்யும் திரு ( அர்ஜுன்தாஸ் )சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்பில் யாரை பார்த் தாலும் கொலை செய்ய வேண்டும் என்ற மனநோயுடன் இருக்கிறான். தனக்கென்று உறவு என்று யாரும் இல்லாத நிலையில் அவனுக்கு காதல் உறவாக கிடைக்கிறாள் உஷா (துஷாரா விஜயன்). கொஞ்ச நாள்.இனிமையாக செல்லும் அவன் வாழ்வில் மீண்டும் புயலடிகிறது. உஷா  வேலை  செய்து வந்த வீட்டில் இருக்கும் பாட்டி இறந்துவிட அவரை  உஷா கொலை செய்துவிட்டதாக பாட்டியின் மகன், மகள் போலீசில் புகார் அளிக்கின்றனர். இந்த புகாரில் திருவும் சிக்கிக்கொள் கிறான்.  உஷாவும் கொலை பழியை திரு மீது போடுகிறாள். இந்த சிக்கலிலிருந்து  திரு.  மீள்கிறானா. அவன் எடுக்கும் முடிவு என்ன என்பதற்கு இரத்தமும் சதையுமாக  பதில் அளிக்கிறது அநீதி.

கைதி, மாஸ்டர் போன்ற படங்களில்.வில்லனாக நடித்த  அர்ஜுன் தாஸ் இதில் கதா நாயகனாக நடித்திருக்கிறார். 4 சண்டை, 4 டூயட் என்றில்லாமல் நாடியும் நரம்பும் துடிக்கும் கடினமான  நடிப்பை வெளிப் படுத்தி உள்ளார்.

தொடக்க காட்சியில் உணவு டெலிவரி செய்யும்போது தகராறு.செய்யும் கஸ்டமர்களை அர்ஜுன் தாஸ்  அடித்து கொல்லும் காட்சிகள் இது வசந்த பாலன் படம் தானா என்ற சந்தேகத்தை எழுப்பு கிறது.  காதலி துஷாரா என்ட்ரிக்கு பிறகுத்தான் வசந்த பாலன் டச் லேசாக வெளிப்படுகிறது.

பங்களா கேட்டின் சிறிய துவாரம் வழியே  துஷாரா கையை நீட்ட அந்த கையை  காதலுடன் அர்ஜுன் தாஸ் பார்க்கும் காட்சிகள். ரிப்பீட்டானாலும் கவித்துவமான காதல் வெளிப்படுகிறது. பின்னர் அர்ஜுன் தாஸ், துஷாராவின் கண்ணியமான காதல் பேச்சுக்களும் காதலின் மென்மையை உணர்த்துகிறது.

திடீரென்று காட்சிகள் மாறுவதும் அர்ஜுன் தாஸ், துஷாரா இருவரும் கொலை வழக்கில் போலீசில் சிக்கி போலீசிடம் அடி வாங்கி கதறுவதும் அரங்கை அமைதி யாக்குகிறது.  பாட்டியின் மகள் வனிதா மற்றும்  அவரது குடும்பத் தினர் துஷாராவை ஈவிரக்கம் இல்லாமல்  அடிப்பது உச்கொ ட்ட வைக்கிறது.  ஒரு கட்டத்தில் கோடாரியுடன் வரும் அர்ஜுன் தாஸ் வனிதா குடும்பத்தை வெட்டி சாய்ப்பது பயங்கரம்.

அர்ஜுன் தாஸ் கதையின் நாயகன் என்றாலும் அவரது குரல் அவரை வில்லனாகவே அடையாளப் படுத்துகிறது

படத்தில் மேலும் பலர் நடித்துள் ளனர். காளி வெங்கட் நெல்லை வழக்கில்  பீச்சி பட்டாசாக வெடிக் கிறார். கடை முதலாளியாக வரும் டி சிவாவும் மனதில் நிற்கிறார்.  பரணி, ஷா ரா சிரிக்க வைக்கின்றனர்.

தந்தையின் பாசம், காதலியின் அரவணைப்பை சொல்ல  முயன்றிருக்கும்  இயக்குனர் வசந்தபாலன் அதில் இரத்தத்தை தெறிக்க விடுவது அச்சத்தை படரச் செய்கிறது.  இயக்குனருக்கு ஏன் இந்த கொலை வெறியோ தெரியவில்லை.

பங்களா கேட் சிறிய கதவு வழியே துஷாராவின் விரல்களில் காதலை தடவி அனுப்பும்  இயக்குனர் அதே மென்மையுடன் கதையை நகர்த்தி இருந்தால் இன்னொரு அங்காடித் தெருவின் அனுபவம் கிடைத்தி ருக்கும்.

ஜி வி பிரகாஷ்குமார் இசையில் திகட்ட திகட்ட காதலிப்போம் பாடல் நா முத்துகுமாரின் நினைவை நிழலாடச் செய்கிறது.

அநீதி – மென்மையான வசந்தபாலனிடம்  ரசிகர்களின்  எதிர்பார்ப்புக்கு பாதி நீதியும், பாதி அநீதியும்  கிடைத்திருக்கிறது.

 

Related posts

ஹரிஸ் படத்துக்கு சிலம்பரசன் பாடிய 2வது பாடல்

Jai Chandran

கொரோனா வைரஸ் பற்றிய ஹாலிவுட் படம் கான்டிஜென்

Jai Chandran

பிரபு , வெற்றி நடிக்கும் ராஜபுத்திரன் ஆடியோ விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend