Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கிரிக்கெட் அணி உரிமையாளரான கீர்த்தி

KCL கேரள கிரிக்கெட் லீக் போட்டி, திருவனந்தபுரம் அணி, இணை  உரிமையாளர் ஆனார்  கீர்த்தி சுரேஷ் !!

முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெற வுள்ள KCL கேரள லீக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகி யுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் திரைத்துறைக்கு இணையாக கிரிக்கெட்டுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஐபில் போட்டிகள் மீதான மோகத்தை தொடர்ந்து, கேரளத்தில் கேரள ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், கேரளாவிற்கென தனித்த கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது.

ஐபில் போட்டி அணிகளில், நட்சத்திர நடிகர்கள் உரிமையாளர் களாக செயல்பட்டு வருவது போல், கேரள திருவனந்தபுரம் அணிக்கு உரிமையாளராக மாறி அசத்தியுள் ளார் கீர்த்தி சுரேஷ்.

கேரளாவில் கிரிக்கெட் விளையாட்டினை ஊக்கிவிக்கும் வகையிலும், திறமையான இளைஞர்களை இந்தியாவிற்கு அடையாளம் காட்டும் நோக்கிலும் இந்த KCL போட்டிகள் நடக்கவுள்ளது. 6 அணிகள் கலந்துகொள்ளும் 33 போட்டிகளுக் கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

KCL கேரளா கிரிக்கெட் போட்டி களுக்கான அம்பாஸிடராக, முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் செயல்படுகிறார்.

கேரளாவின் முக்கிய நகரங்களி லிருந்து மொத்தமாக 6 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த போட்டிகளில் கலந்துகொள்ள வுள்ளன. மொத்தமாக 33 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட் டுள்ளது. இந்த மொத்த போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பட வுள்ளது. ஐபில் போலவே பல நட்சத்திரங்களும், பிஸினஸ் ஐகான்களும் இப்போட்டிகளில் கலந்துகொண்டு ஊக்குவிக்கவுள் ளனர். விரைவில் போட்டி அணிகள், போட்டி அட்டவணைகள், வீரர்கள் அறிமுகம், மற்றும் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1ல் நேரலையில் ஒளிபரப்பாகவுள்ளது, முதல் போட்டி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மட்டும் ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பப். படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐஃபா விருதினை வென்ற சாம் சி. எஸ்.

Jai Chandran

தேன்’ படத்திற்கு புதுச்சேரி மாநில விருது : பட நாயகன் தருண்குமார் நன்றி

Jai Chandran

போட் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend