Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஐஃபா விருதினை வென்ற சாம் சி. எஸ்.

2023 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணியிசைக்கான ஐஃபா விருதிற்கு தமிழ் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளரான சாம் சி எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கிறார்.

இந்திய திரையுலக கலைஞர் களுக்கு அளிக்கப்படும் சர்வதேச விருதுகளில் ஐஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதும் ஒன்று. சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இந்தி திரைப் படங்களுக்கு ஆண்டுதோறும் ஐஃபா விருது வழங்கி கௌரவிக் கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கு சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கான பிரிவில் விருது பெறும் கலைஞர்களின் பட்டியலை விருது குழு வெளி யிட்டிருக்கிறது. அதில் சிறந்த பின்னணியிசைக்கான பிரிவில் இந்தியில் வெளியான ‘விக்ரம் வேதா’ எனும் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மே மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் துபாயில் உள்ள யெஸ் தீவில் நடைபெறும் கோலாகல மான விருது வழங்கும் விழாவில் சாம் சி. எஸ்ஸிற்கு சிறந்த பின்னணி இசையமைப்பாள ருக்கான ஐஃபா விருது வழங்கப்படுகிறது.

இதனிடையே 2017 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படத்திற்காக சாம் சி எஸ்ஸிற்கு ப்ரவோக் விருது, ஹலோ எஃப் எம் விருது, விகடன் விருது, விஜய் அவார்ட்ஸ் ஆகிய விருதுகளை வென்றிருக்கிறார் என்பதும், இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் இவருக்கு சிறந்த பின்னணியிசையமைப்பாளருக்கான ஐஃபா விருதை வென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆக்ஸிஜன் உற்பத்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு கண்காணிப்பு குழு: அரசு நியமனம்

Jai Chandran

நாக சைதன்யாவின் “தண்டேல்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

Jai Chandran

அமைச்ரர் சாமிநாதனுக்கு தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend