தனுஷ் நடிக்க கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கும் படம் கர்ணன். கடந்த 9ம் தேதி வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் ரசிகர் களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக் கிறது.. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த 10 ம் தேதி முதல் திரையரங்குகளில் 50சதவீதம் டிக்கெட் மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டது. இது தயாரிப்பாளர் மற்றும் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் தற்போது அரசு புதிய தளர்வை தியேட்டர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி இந்த கால கட்டத்தில் வெளியாகும் படங்கள் வழக்கமாக திரையிடும் கா ட்சிகளைவிட கூடுதலாக ஒரு காட்சி கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி, 7 நாட்களுக்கு நடத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.. இதன் மூலம் கர்ணன் மற்றும் சுல்தான் ஆகிய படங்கள் கூடுதல் காட்சிகள் திரையிட வழி ஏற்பட்டுள்ளது