Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

காந்தாரா (பட விமர்சனம்)

படம்: காந்தரா

நடிப்பு: ரிஷப் ஷெட்டி, அச்சுத்குமார், சப்தமி கௌடா

தயாரிப்பு: ஹோம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர்.

இசை: அஜனீஷ் லோக்நாத்

ஒளிப்பதிவு : எஸ் காஷ்யப்

இயக்கம்: ரிஷப் ஷெட்டி

பி ஆர் ஓ: யுவராஜ்

18ம் நூற்றாண்டில் கர்நாடகா உடுப்பி, மங்களூர், வடக்கு கேரள பகுதிகளை ஆண்ட மன்னருக்கு எல்லா வசதிகள் இருந்தும் நிம்மதி இன்றி தவிக்கி றார். நிம்மதியை தேடி பல குருமார்களை சந்திக் கிறார். காட்டுப் பகுதியில் காவல் தெய்வமாக திகழும் பஞ்சுருலி யிடம் வேண்டும்போது அந்த தெய்வம் ஒரு நிபந்தனை விதிக்கிறது. காட்டுப் பகுதியில் வசிக்கும் தனது குலமக்கள் வாழ்வதற்காக உன் நிலத்தை தந்தால் உனக்கு நிம்மதி கிடைக்கச்செய்கிறேன்.ஆனால் எந்த நேரத்திலும் அந்த நிலத்தை திரும்ப கேட்கக்கூடாது அப்படி கேட்டால் உன் வாரிசுகள் அழிவார்கள்” என்கிறது. நிபந்தனைப்படி நிலத்தை மக்களுக்கு தானாமாக தந்து நிம்மதியை அடைகிறார். ஆனால் அவரது அடுத்த தலைமுறை தனது மூத்தோர் அளித்த நிலத்தை திரும்ப கேட்டு கோர்டுக்கு செல்கி றார். அவர் கோர்ட்டு வாசலிலேயே உயிர் விடுகிறார். இவரது மகன் அம்மக்களுக்கு நல்லது செய்வது போல் நடித்து நிலத்தை அபகரிக்க எண்ணுகிறார். அவரது எண்ணத்தை அங்கு வாழும் இளைஞன் சிவா (ரிஷப் ஷெட்டி) தெய்வத்தின் துணையோடு எப்படி முறியடிக்கிறான் என்பதே கிளைமாக்ஸ்.

ஒவ்வொரு ஊருக்கும் காவல் தெய்வங்கள் இருப்பதுபோல் கர்நாடக காட்டுப்பகுதியில் வாழும் மக்களின் காவல் தெய்வம் பஞ்சுருல்லி தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து காந்தாரா படம் உருவாகியுள்ளது. காவல் தெய்வம் கதை என்பதால் நம்மூர் மக்களை  யும் எளிதாக தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது.

ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியிருப்  பதுடன் சிவா என்ற கதாபாத் திரத்தில் நடித்திருக்கிறார்.

நண்பர்களுடன் அரட்டை கச்சேரி நடத்திக் கொண்டு ஊர்சுற்றித் திரியும் ரிஷப் ஊர் பெரிய மனிதரின் வார்த்தைக்கு கட்டுப் பட்டு அவர் சொல்வதையெல்லாம் செய்யும்போது நடிப்பில் எதார்த்தம் இழையோடுகிறது.

ரிஷப்புக்கும், காட்டிலாகா அதிகாரி ஆடுகளம் கிஷோருக்கும் இடையே நடக்கும் மோதல் படத்தில் ஒரு அண்டர்கரண்ட் பதற்றத்தை கிளை மாக்ஸ் வரை கொண்டு செல்கி றது. நேருக்கு நேர் இருவரும் மோதிக் கொள்ளும்போது பதற்றம் மேலும் அதிகரிக்கிறது.

காதலியுடன் ரிஷப்பின் நெருக்க மான காட்சிகள் ஹாட். இப்படி சுற்றித் திரிந்துக்கொண்டிருக்கும் ரிஷப் கிளைமாக்ஸில் காவல் தெய்வமாக மாறி அதிர வைக்கும் சத்ததுடன் சாமியாடும்போது மின்சாரம் தொட்டதுபோல் ஷாக் தருகிறார்.

படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரஙகளும் தங்கள் பங்களிப்பை முழுமையாக அளித் திருக்கின்றனர்.
கிஷோர் காட்டிலாகா அதிகாரியாக மிரட்டி உள்ளார்.

ஹோம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.

அஜனீஷ் லோக்நாத் இசை பெரும் தூண்.

காட்டுபகுதியில் எஸ் காஷ்யப் செய்திருக்கும் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு காட்டியிருக்கும் மாறுபட்ட கலர் டோன்களும் கடந்த காலத்துக்கே ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.

இயக்குனர் ரிஷப் ஷெட்டி மண்ணின் மனம் மாறாமல் புதைந்து கிடந்த நம்பிக்கையை மீட்டிருக்கிறார்.

காந்தாரா- கலாச்சார மீட்டெடுப்பு.

 

Related posts

Veeramae Vaagai Soodum hit the screens on February 4th.

Jai Chandran

பாக்ஸ் ஆபிஸில் விஜய்சேதுபதியின் மகாராஜா

Jai Chandran

SPB 75th bday to raise funds for TN C M Corona Relief operation

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend