Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தர்புகா சிவா இயக்கத்தில் உருவான “முதல் நீ முடிவும் நீ”, ஜீ5 தளத்தில் ஜனவரி 21ல் ரிலீஸ்

 

“முதல் நீ முடிவும் நீ” இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்ட மென்மையான டிராமா திரைப்படம் ஆகும். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியை பெறுவது பற்றியான கதைக்கருவில் இப்படம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் சென்னையில் 90’s களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இந்தக்கதை விவரிக்கப்பட்டுள்ளது. அந்த இளைய சமுதாய சிறுவர்களின் மனவெளியைப் பிரதிபலிப்பதுடன், அந்தக் காலத்தின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பின்னர் கதை வேறொரு இடத்திற்கு நகர்ந்து, வாழ்க்கையின் தேடல்களையும், நோக்கத்தையும் அடைவது குறித்தான மையக் கருப்பொருளை கொண்டுள்ளது.

‘நியூயார்க் திரைப்பட விருது விழாவில், ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் சிறப்பு மிகு கௌரவ விருதை (Honourable Mention) வென்றுள்ளது மேலும், மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலிம் விருது விழாவினில் இத்திரைப்படம் ‘சிறந்த இயக்குனர்’ விருதினையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர, உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரை விழாக்களில் இப்படம் அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் முக்கிய அம்சமாக இசை கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தின் இசைப் பாடல்கள், ஏற்கனவே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, சித் ஸ்ரீராம் குரலில், பாடலாசிரியர் தாமரை எழுதிய இப்படத்தின் டைட்டில் பாடல், பல்வேறு வானொலி நிலையங்களின் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

“முதல் நீ முடிவும் நீ” திரைப்படத்தில், அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், K.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ் CSV, ஹரினி ரமேஷ், கிஷன் தாஸ் உட்பட இளம் நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை எழுதி இயக்குவதுடன், இயக்குநர் தர்புகா சிவா இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். சுஜித் சாரங் (ஒளிப்பதிவு), ஸ்ரீஜித் சாரங் (எடிட்டிங்), தாமரை-கீர்த்தி-காபர் வாசுகி (பாடல் வரிகள்), ஆனந்த் (இணை இயக்குனர் மற்றும் கிரியேட்டிவ் புரடியூசர்), வாசுதேவன் (கலை), G வெங்கட் ராம் (விளம்பர புகைப்படம்), கண்ணதாசன் DKD (விளம்பர வடிவமைப்புகள்) , ராஜகிருஷ்ணன் M.R(ஒலி வடிவமைப்பு), மற்றும் நவீன் சபாபதி (கலரிஸ்ட்) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

ஜீ5 தமிழ்நாட்டின் முதன்மையான விருப்பமிகு ஓடிடி தளமாகமாறியுள்ளது, ஏனெனில் இது சிறந்த உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை பார்வையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. மிக குறுகிய காலத்தில், இந்த முன்னணி ஓடிடி இயங்குதளமானது எண்ணற்ற சிறந்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது, அவை விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றதுடன், பொது ரசிகர்களிடமிருந்தும் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளன. ‘க பே ரணசிங்கம்’ போன்ற அழுத்தமான கதை முதல், நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ‘மலேசியா டூ அம்னீஷியா’ மற்றும் அனைத்து தரப்பினரையும் கவரும் ‘வினோதயா சித்தம்’ வரை, பல அற்புதமான படங்களை ஜீ5 தனது ரசிகர்களுக்கு வழங்கி வந்துள்ளது. இந்த வரிசையில் அருமையான கதையுடன் கூடிய மற்றொரு படத்தை பார்வையாளர்களுக்கு வழங்கவுள்ளது. இசையமைப்பாளர் தர்புகா சிவா ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் இயக்குநராக தனது பயணத்தை துவங்கியுள்ளார், சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்துள்ளார். இப்படம் ஜனவரி 21, 2022 அன்று ZEE5 இல் வெளியாகிறது.

Related posts

இன்ஷா அல்லாஹ் (பட விமர்சனம்)

Jai Chandran

ஷாருக்கின் ‘டங்கி’ பட முன்பதிவு தொடக்கம்

Jai Chandran

டிஜிட்டல் தளத்தில் ஸ்டுடியோ கிரீன், பைனலி பிக்சர்ஸ் கைகோர்ப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend