Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒய் ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை பாராட்டிய கமல்ஹாசன்..

ஒய்ஜிபி துவங்கிய யுஏஏ குழுவின் 70-ம் ஆண்டு, நாடக உலகில் ஒய் ஜி மகேந்திரனின் 61-ம் ஆண்டு போன்ற பல்வேறு சிறப்பம் சங்களுடன் அவரது புதிய நாடக மான சாருகேசி பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக உலகநாயகன் கமல் ஹாசன் சாருகேசி நாடகத்தை நேற்று நேரில் சென்று கண்டு மகிழ்ந்தார். நாடகம் முடிந்த உடன் குழுவினருடன் அவர் கலந்துரை யாடினார்.

இது குறித்து ஓய் ஜி மகேந்திரன் கூறுகையில், “நாடகத்தை பார்த்த கமல்ஹாசன் வெகுவாக பாராட்டி னார். இது போன்ற நாடகங்கள் தனக்கு மிகவும் புடிக்கும் என்று அவர் தெரிவித்தார். எங்கள் இருவருக்கும் 50 வருட கால நட்பு. மேலும் 20 படங்கள் மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம். எங்களுக் கிடையே இருக்கும் நட்பை பற்றியும் அவர் நினைவுகூர்ந்தார்,” என்றார்.

தொடர்ந்து பேசிய மகேந்திரன், “சாருகேசி நாடகத்தை திரைப்பட மாக எடுக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை கமல் வெளிப்படுத்தினார். அவ்வாறு படமாக எடுக்கப்பட்டால் அவரது ஒத்துழைப்பு வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார்,” என்றார்.

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்  தினருடன் சென்று சாருகேசி நாடகத்தை பார்த்து, நாடக குழுவினரை தனது வீட்டிற்கே அழைத்து வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிவராஜ்குமாரின் 131வது படம், ரசிகர்கள் உற்சாகம்

Jai Chandran

Teja Sajja’s Mirai Release On Sep 5th

Jai Chandran

Director Ilango Ram appointed as a Jury..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend