கடந்த 3 ஆண்டாக விஜய் டிவியில் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இவர்களில் சிலர் இங்கு புகழ் பெற்று சினிமா துறைக்கு சென்றிருக்கின்றனர். பிக்பாஸ்4 நேற்று அக்டோபர்4ம் தேதி முதல் விஜய் டிவியில் ஆரம்பமானது. உலக நாயகன் கமல்ஹாசன் ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். முன்னதாக அவர்களிடம் ஒரு பூ செடி கொடுத்து, ’இந்த செடியை பிக்பாஸ் இல்லத்தில் வளர்த்து இங்கிருந்து வீட்டிற்கு செல்லும் போது வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும்’ என்றார்.மொத்தம் 16 போட்டியாளர்களாள் பன்கேற்கின்றனர்.
’கடலோரக் கவிதைகள்’ ரேகா, சனம் ஷெட்டி, ஷிவானி அறந்தாங்கி நிஷா, ரம்யா பண்டியன், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆரி அர்ஜுனா, ரியோ ராஜ், சுரேஷ், பாடகர் வேல் முருகன், டான்ஸர் கேப்ரில்லா, பேஷன் ஷோ அழகி சம்யுக்தா, மிக்ஸட் மார்ஷல் கலை வெற்றியாளர் சோமு சேகர், சூப்பர் சிங்கர் அஜீத், பாலா முருகதாஸ், அனிதா சம்பத் போட்டியாளர்களாக பங்கேற்றிருக்கின்றனர். பிக்பாஸ் 4 வீட்டில் இம்முறை பிரபலங் கள் மட்டுமல்லாமல் பிரபல ஆக விரும்பும் திறமையாளர்களும் பங்கேற்றிருக்கின்றனர்.
ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக கமல் தெரிவித்திருக்கிறார்.