மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இன்று காலை கோவை பூ மார்க்கெட், ஆர்எஸ் புரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருடன் பேசவும், செல்ஃபி (தற்படம்) எடுத்துக் கொள்ளவும் ஆர்வத்துடன் பொதுமக்கள் கூடினர். அப்போது யாரோ தவறுதலாக தலைவரின் காலை மிதித்து விட்டனர்.
கமல்ஹாசனுக்கு ஏற்கானவே காயம்பட்டிருந்த நிலையில் அதற்காக சமீபத்தில்தான் அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது யாரோ அவர் காலில் மிதித்தால் அடிபட்டிருக்கிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனை பெற்றார். காலில் வீக்கம் இருப்பதால், ஓய்வு அவசியம் தேவை என மருத்துவர்கள் சொன்னதற்கிணங்க . கமல்ஹாசன் ஓய்வில் இருக்கிறார். இதனால் இன்றைய பிரச்சார திட்டத்தில் சிறு சிறு மாற்றங்கள் இருக்கும்.என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.