Trending Cinemas Now
தமிழ் செய்திகள்

கமல்ஹாசன் 67வது பிறந்தநாளில் `ஐயமிட்டு உண்’ அன்னதானத் திட்டத் துவக்க விழா

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளை கொண் டாடும் வகையில் 7 நாட்கள் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஐய்யமிட்டு உண் திட்டம் தொடக்க விழா இன்று நடை பெற்றது.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவரின் 67வது பிறந்த நாளை (நவம்பர் 7) முன்னிட்டு, நவம்பர் 1 முதல் 7 வரை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என்ற வகையில் மொத்தம் 7 லட்சம் பேருக்கு தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமான `ஐயமிட்டு உண்’ அன்னதானத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவுசெய்து, இன்று காலை 11 மணியளவில் `நம்மவர்’ கமல் ஹாசன் கொடியசைத்து திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கட்சித் துணைத் தலைவர் A.G.மௌரியா I.P.S., (ஓய்வு) மாநிலச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இன்று, முதல் தவணை யாக 9 வாகனங்களில் சுமார் 7,000 பேருக்கான உணவுகள் நகரின் பல பகுதிகளில் விநியோகிக்க, தலைவ ரால் அனுப்பிவைக்கப் பட்டன. இந்த அன்ன தானத் திட்டம், இன்றி லிருந்து தமிழகம் முழுவதும் ஏழு நாட்கள் தொடர்ந்து செயல் படுத்தப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
காலகாலமாக உடல் தானம், உறுப்பு தானம், கண் தானம், ரத்த தானம் என நற்பணிகளை

 

தொடர்ந்து செய்துவந்த நம்மவர், தற்போது நாட்டில் பெருகிவரும் ஏழ்மையை யும், அதன் ஆபத்தையும் உணர்த்தும்வண்ணம் இந்த ஆண்டு தனது பிறந்தநாள் பணியாக அன்னதானம் செய்வ தென்று முடிவெடுத்து, அதை இன்று துவக்கி வைத்துள்ளார்.

இதனை மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது

Related posts

இளையராஜாவிடம் ஆசி பெற்ற சாமானியன் குழு

Jai Chandran

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ பட ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

தேசிய விருது வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend