கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள படம் விக்ரம். விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின் றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்தி ருக்கிறார். இப்படம் வரும் ஜூன் 3 ம் தேதி திரைக்கு வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது.
இப்படத்தின் பத்திரிகை, ஊடகவியலா ளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கலந்துககொண்டனர.
கமல்ஹாசன் கூறியதாவது:
விக்ரம் படம் வித்தியசமான படமாக இருக்கும் . 16 வயதினிலே படத்தில் நடித்தபோது பாரதிராஜா இயக்கத்தில் நடித்தேன் அப்போது அவர் புதியவர். அதுபோல் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறேன் இவருக்கு இது நான்காவது படம். அன்றும் இன்றும் நான் இளைஞர் களுடன் பணியாற்றுகிறேன்.
நான் சினிமாவில் நடித்து நான்கு வருடம் இடைவெளி ஆகிவிட்டது. ரசிகர்களை காக்க வைத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் மக்களை சந்தித்துக் கொண்டிருந்தேன். விக்ரம் 5 மொழிகளில் வெளியாகிறது. அதற்கான புரமோஷனுக்காக வெளிமாநிலங்கள் செல்கிறேன்.
இப்படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் என்னுடைய ரசிகர்கள். படப்பிடிப்பின் போது என்னை பாராட்டிக்கொண்டே இருந்தார்கள். அது வித்தியாசமாக இருந்தது. விக்ரம் படம் அதிக விலைக்கு விற்றிருக்கிறது.
விக்ரம் பட டைட்டிலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் கேட்டு வைத்தார். அன்று விக்ரம் படத்தை ராஜசேகர் இயக்கினார். அவர் கே எஸ்.ரவிகுமார்போல் கமர்ஷியல் டைரக்டர்.
தற்போது. விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதை இரண்டாம் பாகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். விக்ரம் 3 ம் பாகத் தையும் லோகேஷ் கனகராஜ் இயக்குவார். இப்படத்தில் பணியாற்றிய இசை அமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட அனைவரும் கடுமையான உழைப்பை தந்திருக்ககிறார்கள்.
இந்த படத்தின் வெற்றிவிழாவில் மீண்டும் சந்திப்போம்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
விக்ரம் படத்துக்கு தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
பின்னர் கேள்விகளுக்கு பதில் அளித்த கமல், ” விக்ரம் படத்தில் பத்தல பத்தல பாடலில் வரும் ஒன்றியம் பற்றி கேட்கிறார்கள். ஒன்றியம் என்றால் நிறைய இருக்கிறது. பத்திரிகையா ளர்கள் எல்லலாம் சேர்ந்தால் அவர்கள் ஒரு ஒன்றியம், டைரக்டர்கள் எல்லாம் சேர்ந்தால் அது ஒரு ஒன்றியம். ஒன்றியத்துக்கு பல அர்த்தங்கள் உண்டு.
ஜூன்3 கலைஞர் பிறந்தநாளில் விக்ரம் வெளியாவது பற்றி கேட்கிறார்கள். முதலில் இப்படம் வேறு தேதியில் வெளியாக இருந்தது. அந்த தேதி தள்ளிப்போய் 3ல் வெளியாகிறது. கலைஞரிடம் நான் நன்கு பழகி உள்ளேன். தசாவதாரம் கதையை அவர் பிஸியாக இருந்தபோது என்னிடம் கேட்டு சில திருத்தமும் சொன்னார். அவர் பிறந்தநாளில் விக்ரம் வெளியாவது மகிழ்ச்சிதான்.” என்றார்.a
விழாவில் விக்ரம் பட பி ஆர் ஒ டைமண்ட் பாபு 600வது படத்தை நிறைவு செய்வதால் அவருக்கு பத்திரிகையா ளர்கள் சார்பில் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார்.