Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழுக்கு இடையூறாக யார் வந்தாலும் எதிர்ப்பேன்: விக்ரம் விழாவில் கமல் பரபரப்பு பேச்சு

விஜய் நடித்த மாஸ்டர் படத்தையடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் “விக்ரம் ” படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்.  விஜய் சேதுபதி, பஹத் பாசில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் நரேன்,  அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசை அமைக்கிறார்.  கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் கமல்ஹாசன் எழுதி பாடி நடித்துள்ள  “பத்தல பத்தல” என்ற  பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்றள்ளது.   யூ டியூபில் டிரெண்டிங் ஆனது.

கமலின் விக்ரம் படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் “விக்ரம்” படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என் படத்தின் விழா, அதற்கு நான் காரணமல்ல நீங்கள் தான் (ரசிகர்கள்) யாருமே இங்கு முழு நேர அரசியல் வாதிகள் அல்ல. முதன்முதலில் நான் அரசியலுக்கு வருகிறேன் என்ற பொழுது டி.ஆர்.என்னை தேடி வந்து கதறி கதறி அழுதார், நீங்கள் எப்படி இப்படி பண்ணலாம்னு கேட்டு அழுது என் சட்டை நனைந்துபோனது, என் முடிவுக்கு நான் உட்பட பலரும் வருத்தப்பட்டார்கள். அரசியல் களத்தில் புதிய நாகரீகத்தை வளர்க்க அரசியல் வந்துள்ளேன். இப்ப வரவில் லை என்றால் எப்போது?

தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை, அதற்கு இடையூறாக யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன் இதற்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. தாய் மொழியை விட்டுவிடாதீங்க. இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை, ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை. இந்தியாவின் அழகு அதன் பன்முகத்தன்மை.

என் தமிழ் உச்சரிப்புக்கு காரணம் மூவர் சிவாஜி, கலைஞர், கண்ணதாசன். தாத்தாவுடன் தொடங்கிய பயணம் தற்போது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறார்களா என்று கேட்டனர்.
தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்டு எனக்கு  நண்பர். அது எப்படி என்று கேட்கலாம்? ஏன், ரஜினிகாந்தும் நானும் போட்டியாளர் களாக இருந்து கொண்டு நண்பர்களாக இல்லையா? அதுபோலதான்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

விழாவில் உதயநிதி ஸ்டாலின்  எம் எல்ஏ கலந்துகொண்டார் அவர் பேசும்போது கூறியதா வது:-

கமலை மிரட்டி  விக்ரம் படத்தை வாங்கிவிட்டீர்களா என கேட் டார்கள், யார் மிரட்டினாலும்  பயப்படக்கூடியவர் அல்ல கமல்சார். அவரை யாரும் மிரட்ட முடியாது.

கமல் நடிப்பை பார்த்து வளர்ந்தவன் நான்  அவருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கமல்சார் அரசியல் கட்சி தொடங்கி சிறப்பாக செயல் பட்டு வருகறார். ஆனால் வருடத்திற்கு ஒரு படமாவது நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இப்படத்தின் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் வெளி யாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.

விழாவில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் சிலம் பரசன்  விஜய் சேதுபதி, உள்ளிட்ட ஏராளமான திரை யுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
“விக்ரம்” டிரெய்லர் திரையிட்ட போது அரங்கே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் ஆர்வாரம் செய்தனர்.
“பத்தல பத்தல” பாடலுக்கு கமல் ஆடிய காட்சியின்போதும் ஆரவாரம் காதை துளைத்தது.

விழவுக்கு வந்தவர்களை பி ஆர் ஒ டைமண்ட் பாபு வரவேற்றார்.

Related posts

DOCTOR STRANGE IN THE MULTIVERSE OF MADNESS..

Jai Chandran

கண்ணன் ரவி தயாரிப்பில் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ பட வெற்றி விழா..

Jai Chandran

Wedding of Dr. Prasiddha NR and Mr. Balaji

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend