Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கல்லூரி பேராசிரியைக்கு கமல் கண்டனம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“குறிப்பிட்ட சமூக மாணவர்கள் என்றாலே பிரச்சினைதான். உன் முகத்தைப் பார்த்தாலே நீ எந்த சாதி என்று தெரிகிறது” என மாணவரிடம் விஷத்தைக் கக்கியிருக்கிறார் சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியை ஒருவர். இது தொடர்பான ஆடியோ வெளியாகி, அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், “அந்தக் குறிப்பிட்ட சாதி பசங்களால்தான் நமக்குப் பிரச்சனை, நீ எந்த கம்யூனிட்டி?” என்றும் அவர் கேட்டிருக்கிறார். தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய பேராசிரியர்களே, அந்த கொடுங்குற்றத்தைப் புரிவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

இளம் தலைமுறையை நல்ல முறையில் வழிநடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களில் சாதி புரையோடிப் போயிருக்கிறது. சாதியை முன்னிறுத்தி, மாணவர்களை இழிவுபடுத்திப் பேசியது உண்மையெனில், சம்பந்தப்பட்டவரை தண்டிக்க வேண்டும். இனியும் இதுபோல நிகழாத வகையில், கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கங்குவா எதிர்மறை விமர்சனம் புறந்தள்ளுங்கள்: ஜோதிகா பரபரப்பு

Jai Chandran

திரிஷா நடிக்கும் ‘ராங்கி’ பட பாடல் வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. லைகா நிறுவனம் தயாரிக்கும் படம்

Jai Chandran

மக்கள் நீதி மய்யம் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend