படம்: கள்வன்
நடிப்பு: ஜி வி பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா, தீனா, ஜி ஞானசம்பந்தம், வினோத் முன்னா
தயாரிப்பு: ஜி டில்லி பாபு
இசை: ஜி.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவு: பி வி ஷங்கர்
இயக்கம் : பி வி ஷங்கர்
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா
காட்டுப்பகுதி மலை கிராமத்தில் வெட்டியாக சுற்றித் திரியும் ஜிவி பிரகாஷ் அவரது நண்பர் தினா இருவரும் திருட்டு வேலையில் ஈடுபடுகின்றனர். இவானா வீட்டில் திருடச் சென்று வசமாக சிக்கி கொள்கின்றனர். அவர்களை இவானா போலீசில் பிடித்துக் கொடுத்தும் பிரகாஷ் திருந்துவது போல் தெரியவில்லை ஆனாலும் இவானா மீது அவருக்கு காதல் வந்து விடுகிறது. ஒரு திருட்டுப் பையனை காதலிக்க மாட்டேன் என்று இவானா சொல்கிறார். இதற்கிடையில் முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜா வை தான் பார்த்துக் கொள்வதாக ஜிவி பிரகாஷ் அழைத்து வருகிறார். ஆனால் அவரை யானைக்கு பலி கொடுத்துவிட்டு அதன் மூலம் அரசிடமிருந்து இழப்பீடு வாங்க திட்டமிடுகிறார். இரட்டை குதிரை சவாரி செய்யும் இக்கதையின் முடிவு என்ன என்பதை நெகிழ்ச்சியுடன் விளக்குகிறது கள்வன்.
ஜிவி பிரகாஷ் குமார் திருட்டுப் பயலாக நடித்திருக்கிறார். அவர் இவானா வீட்டுக்கு திருடச் சென்று அவரது அழகில் மயங்கி அவர் செல்லும் இடமெல்லாம் சென்று சைட் அடித்து காதல் வலை விரிப்பதில் சக இளவட்டங்களின் பிரதிபலிப்பை வெளிப்படுத்து கிறார்.
பாரதிராஜாவிடம் உருக்கமாக பேசி வீட்டுக்கு அழைத்து வரும் ஜிவி பிரகாஷ் அவரை யானைக்கு பலி கொடுக்க திட்டமிட்டது தெரிய வரும்போது வில்லனாக கண் முன் நிற்கிறார்.
இவானா எதார்த்தமாக நடித்து கதாபாத்திரத்தோடு ஒன்றி இருக்கிறார். ஜிவி பிரகாஷை வெறுப்பதும் பின்னர் அவரை காதலிக்க தொடங்குவதும் ருசிகரம்.
ஜிவி பிரகாஷின் நண்பராக வரும் தினா இடக்கு மடக்காக பேசி சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.
பாரதிராஜா முற்றிலும் வித்தியாசமான ஒரு கதாபாத் திரத்தை ஏற்று அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கி றார். புலியை கண்களால் மிரட்டி அவர் விரட்டுவது முதலில் ஒப்புக்கொள்ள முடியாததாக இருந்தாலும் பின்னர் அவர் என்ன வேலை செய்தார் என்பதை ஃப்ளாஷ் பேக்கில் கூறும்போது ஓரளவுக்கு ஏற்க முடிகிறது.
ஜி டில்லி பாபு படத்தை தயாரித்தி ருக்கிறார்
ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருக்கிறார் பி.வி ஷங்கர். காட்டுப்பகுதிக்குள் படத்தை படமாக்கி இருப்பது சிரமம் என்றாலும் கதையில் புதுமை எதுவும் இல்லை. வழக்கமான ஒரு காதல் கதைதான் காட்டுவாச னையுடன் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசை ஒ கே
கள்வன்- சோடை போகவில்லை.