Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஆலகாலம் ( பட விமர்சனம்)

படம்: ஆலகாலம்

நடிகர்கள் : ஜெய கிருஷ்ணமூர்த்தி, சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா ஷங்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர், பாபா பாஸ்கர்

தயாரிப்பு : ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்

இசை : என். ஆர். ரகுநந்தன்

ஒளிப்பதிவு : கா சத்யராஜ்

இயக்கம் : ஜெய கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு : ஆக்சன் ரியாக்ஷன் ஜெனிஷ்.

பி ஆர் ஒ சக்தி சரவணன்

 

எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிக்கும் ஜெய் சக மாணவி சாந்தினியை காதலிக்கிறார். படிக்கும்போதே இருவரும் திருமணம் செய்து கொள்கின் றனர். இந்நிலையில் ஜெய் கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுகிறார். இனி வேலை செய்தால்தான் பிழைப்பு என்று வேலை தேடுகிறார் ஜெய்.  கட்டிடம் கட்டும் இடத்தில் எலக்ட்ரிகல் ஒர்க் செய்கிறார். அங்கு பழக்கமாகும் நண்பர் அவருக்கு குடிபழக்கத்தை ஏற்படுத்துகிறார். குடிக்கு அடிமை யாகும் ஜெய் குடும்பத்தை மறக்கி றார் .  இதனால் அவர் ஒரு காலையும் இழக்கிறார். குடி அவரை பிச்சைக்காரனாக்குகிறது. இந்த விஷயம் ஜெய் தாயாருக்கு தெரிய வர அவர் மகனைப் பார்த்து கதறுகிறார். இதன் முடிவு என்ன வாகிறது என்பதை படம்  உருக்கமாக சொல்கிறது.

குடியின் தீமையை பற்றி நிறைய படங்கள் வந்திருக்கின்றன ஆனால் இந்த படத்தைப்போல். எந்த படமும் இவ்வளவு அழுத்த மாக குடியின் தீமையை சொல்ல. வில்லை.

ஜெய கிருஷ்ணமூர்த்தி ஹீரோ வாக நடித்து  படத்தையும் டைரக்ட் செய்திருக்கிறார். நடிப்பிலும் இயக்கத்திலும் முதல் படத்தி லேயே  தேறியும் இருக்கிறார்.

தொடக்க காட்சிகளில் இவர் என்ன இப்படி வந்துக் கொண்டும் போயுக் கொண்டும் இருக்கிறார் என்று  என்ன வைத்து குடிகாரனாக மாறிய பிறகு குடிவெறியனாக அவர் நடிக்கும் காட்சி கடுப்பை ஏற்றுகின்றன  அந்த கடுப்பு தான் அவர் நடிப்புக்கு கிடைத்த பரிசு. கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து விட்டு  ஒற்றை காலுடன் தவழ்ந்து சென்று டாஸ்மாக் பாரில் பிச்சை எடுப்பது ஒரு சில நபர் களை தோலுரித்து காடடுகிறது  குடிக்கு அடிமையானவர்கள் குடிப்பதற்காக எந்த அளவுக்கு  தரம் தாழ்ந்து போவார்கள் என்பதற்கு இந்த காட்சிகளே போதுமானது.

பட கதாநாயகி சாந்தினி சாந்தமா கவே நடித்திருக்கிறார். ஆனால் குடிக்கு அடிமையான ஒரு கணவன் இவ்வளவு கொடுமைகள் செய்யும்போது இந்த காலத்தில் இப்படி ஒரு மனைவி இருப்பாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறார்.

தீபா போல் பாசம் காட்டும்  ஒரு பக்கத்து வீட்டுக்கரம்மா இந்த கால கட்டத்தில் இருக்கிறாரா. .?

ஜெயின் தாயாராக வரும் ஈஸ்வரி ராவ் மகனை குடிகாரனாக்கிய மதுபான கடையை தீயிட்டு கொளுத்தும் போது பத்திரகாளி யாகிவிடுகிறார்.

ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

கா சத்யராஜ் ஒளிப்பதிவு எதார்த்தம் மீறவில்லை

என் .ஆர. ரகுநந்தன் இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இரந்தால் பாடல் வரிகள் அழுத்த தாக மனதில் பதிந்திருக்கும்.

ஆலகாலம்  – மதுவின் மறுபெயர்.

 

 

 

Related posts

Oongiadicha Ondraton weightuda Movie Teaser Out Now.

Jai Chandran

ட்ரெண்டிங்கில் அமலா பாலின் ‘தி டீச்சர்

Jai Chandran

ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend