Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கல்கி 2898 AD (பட விமர்சனம்)

படம்: கல்கி 2898 AD

நடிப்பு: பிரபாஸ், அமிதாப் பச்சன்,  கமலஹாசன், தீபிகா படுகோன், சோபனா,  திஷா பதாணி பசுபதி,  பிரமானந்தம்

தயாரிப்பு: வைஜெயந்தி பிலிம்ஸ் சி அஸ்வின் தத்

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு:  பிஜோர்டிஜே

இயக்கம்:  நாக் அஸ்வின்

பி ஆர் ஓ:  யுவராஜ்

 

புராண காலத்தையும் எதிர்காலத்தையும் கலந்து புராணம் பிளஸ் விஞ்ஞானம் இரண்டையும் குழப்பி அடித்து உருவாகி இருக்கும் படம் தான் கல்கி 2898 ஏ டி.

மகாபாரத போர்க்களத்தில்  கிருஷ்ணரை கொல்ல  அஸ்வத்தாமா ஆயுதம் வீசுகிறார். அதில் தப்பிக்கும் கிருஷ்ணர் அஸ்வத்தாமாவுக்கு சாபம் தருகிறார். யுகங்கள் முடிந்தாலும் உனக்கு சாவு நேராது நீ உயிரோடு இருந்து பாவத்திற்கு தண்டனை அனுபவிப்பாய் என்கிறார். இந்தப் பாவத்திலிருந்து விமோச்சனம் கிடைக்காதா என்று அஸ்வத்தமா கேட்க,  நான் அடுத்த அவதாரம் எடுக்கும்போது என்னை கருவிலேயே பாதுகாக்கும் ஒரு வாய்ப்பு வரும் அந்த நேரத்தில் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்கிறார் கிருஷ்ணர். யுகங்கள் மாறுகிறது புராணத்தில் சொன்ன கல்கி. யுகம் பிறக்கிறது. தீயவர்கள் உலகை ஆக்கிரமிக்கி றார்கள். நாட்டிலுள்ள எல்லா வளத்தையும் அவர்கள் உறிஞ்சி எடுத்து தங்கள் கட்டுப்பாட்டில்  உள்ள காம்ப்ளக்ஸில் வைத்துக் கொள்கிறார்கள். பெண்களை அடிமைப்படுத்தி தங்கள் இஷ்டத் துக்கு அனுபவிக்கிறார்கள்.  காம்ப்ளசுக்கு உள்ளே செல்ல வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகை தர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. காம்ப்ளக்சுக்குள் செல்ல துடிக்கிறான் பைரவன் (பிரபாஸ்). அந்த காம்ப்ளக்சுக்குள் அடைபட்டு கிடக்கும்  சுமதி (தீபிகா படுகோன்) வயிற்றில் கரு உண்டாகிறது. இதை அறிந்த காம்ப்ளக்ஸ் அதிகாரி அந்த குழந்தையையும் சுமதியையும் காம்ப்ளக்சின் சுப்ரீம் பவர்  யஸ்கினிடம்  (கமல்ஹாசன்) ஒப்படைக்க முடிவு செய்கிறார். இதற்கிடையில் காம்ப்ளக்ஸிலி ருந்து சுமதி தப்பி செல்கிறார் அவரை காம்ப்ளசுக்கு எதிராக போராடும் சம்பாலா போராளிகள் காப்பாற்றுகிறார்கள். ஆனாலும் விடாப்பிடியாக காம்ப்ளக்ஸ் சிப்பாய்கள் துரத்துகிறார்கள். அப்போது மறைவான இடத்தில் ஒளிந்திருக்கும் அஸ்வத்தாமா ( அமிதாப்பச்சன்)  வெளிப்பட்டு  சுமதியை காப்பாற்றுகிறார். ஒருவழியாக வயிற்றில் இருக்கும் கல்கி அவதாரத்தை பெற்றெடுக்க சம்பாலா பகுதிக்கு சுமதி பாதுகாப் பாக அழைத்துச் செல்லப்படு கிறாள் . ஆனால் அங்கும் காம்ப்ளக்ஸ் சிப்பாய்கள் முற்றுகை யிட்டு அவரை தாக்குகிறார்கள். சுமதியை பிடித்து காம்ப்ளக்ஸில் ஒப்படைத்து காம்ப்ளக்சுக்குள்  செல்ல திட்டமிடும் பைரவாவும் சிப்பாய்களுடன் சேர்ந்துக் கொள்கிறார். அவர்கள் நடத்தும் பலமுனை தாக்குதலில் இருந்து சுமதியை அஸ்வத்தாமாவால்  அவரை காப்பாற்ற முடிகிறதா?  கல்கி அவதாரம் பிறந்ததா? என்ற  நம்ப முடியாத கேள்விகளுக்கு முக்கால்வாசி விடை அளித்திருக். கிறது கல்கி 28 98 படம்.

மகாபாரதத்தில் இருந்து ஏற்கனவே மணிரத்தினம் இயக்கிய தளபதி உள்ளிட்ட பல்வேறு படங்கள் சமூகப் படங்களாக வெளியாகி இருக்கின்றன. மகாபாரதம் புராணம் என்பது ஆதிகாலத்தில் இருந்து நம்மூர் மக்களுக்கு கேட்டு கேட்டு மனதில் பதிந்து போன விஷயம் என்பதால் அந்த கதையிலிருந்து எந்த அத்தியாயத்தில் ஒரு காட்சியை எடுத்தாலும் அதை எளிதாக கண்டுபிடித்து அடையாளம் கண்டு விடுவார்கள்.

ஆனால் அப்படி கண்டுபிடிக்கும் வேலையே இல்லாமல் கல்கி 2898 படத்தில்  இது மகாபாரத கதை தான் என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார் இயக்குனர். . ஏற்கனவே புராணக்கதை அந்த  கதையை மேலும் தன்னுடைய கற்பனையில் பிரம்மாண்ட புருடாக்களை இணைத்து  விஞ்ஞானம் ஆன்மீகம் கலந்த கதையாக உருவாக்கி இருக்கிறார்.

இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக வந்தாலும் அவருக்கு கிட்டத்தட்ட காமெடி வேடம் தான் அமைந்திருக் கிறது.  ஏனென்றால் படத்தில்  அஸ்வத்தாமாவாக நடித்திருக்கும் அமிதாப்பச்சனுக்கு தான் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் தரப்பட்டிருக்கிறது. 80 வயதை தொடும் நிலையிலும் அமிதாப்பச்சன் பாய்ந்து பறந்து போடும் சண்டைக் காட்சிகள் அதிர விடுகிறது. அவர் முன்னால் பிரபாஸ் ஒன்றுமில்லாமல் ஆகியிருக்கிறார். இப்படி நடிப்பதற்கு பாகுபலி பிரபாஸ் தேவையா என்ற கேள்வி கூட எழுகிறது ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இமேஜ் ஆவது ஏழாவது என்று எண்ணிக் கொண்டு தனக்கு முக்கியத்துவம் இல்லாமல்  வந்த படங்களில் எல்லாம் நடித்துக் கொண்டிருக் கிறார் பிரபாஸ். அந்த ராஜமவுலி தான் இவரை காப்பாற்ற வேண்டும்.

தீபிகா படுகோனை காம்ப்ளக்ஸில் ஒப்படைக்கும் வில்லத்தனமான வேலைகளை செய்யும் பிரபாஸ் திடீரென்று அவரைக் காப்பாற்றவும் செய்கிறார் மீண்டும் பிடித்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபடுகிறார் இது என்னடா  கதாபாத்திரம் என்று தலையில் அடித்துக் கொள்ள வைக்கிறார்.

கிருஷ்ணனின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தை பெற்றெடுக்கும் தாயாக தீபிகா படுகோன் வேம் ஏற்றிருக்கிறார் .  ஆனால் கடைசிவரை அவர் கல்கியை பெற்றெடுக்காமலே மாயமாகி விடுகிறார்.

இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனும் நடித்திருக்கிறார் ஆனால் எங்கே கமல்ஹாசன் என்று பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டி இருக்கிறது. இதோ வருவார் அதோ வருவார் என்று பார்த்தால் கடைசியில் கிளைமாக்ஸ்சில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே காம்ப்ளக்சின் சுப்ரீம் பவர்  பாத்திரத்தில் வருகிறார். அமிதாப்பச்சன் போல் இவரும் ஒரு ஆக்சன் அதிரடி காட்டுவார் என்று பார்த்தால் அதற்குள் படத்துக்கு தொடரும் என்று சொல்லி எண்டு கார்டு போட்டு  விடுகிறார்கள்.

காமெடி காட்சிக்கு பிரமானந்தம் இருக்கிறார் என்று பார்த்தால் அவரை ஏதோ ஒரு பரண்மேல் படுக்க வைத்து நோயாளியாக்கி இருக்கிறார்கள் படுத்துக் கொண்டே அவரால் எப்படி சிரிப்பு காட்ட முடியும் கடுப்பைத் தான் காட்டுகிறார்

ஷோபனா திசா பதாணி பசுபதி இவர்களுக்கெல்லாம் பெரிதாக எந்த வேலையும் இல்லை.

கல்கி 2898 ஹாலிவுட் படத்தைப் பார்த்தது போன்ற ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் படத்தின் அரங்க அமைப்பாளரும் கிராபிக்ஸ் வி எஃப் எக்ஸ் காட்சிகள் மட்டுமேதான். காரணம்.

இயக்குனர் நாக் அஸ்வின் எதையோ சொல்ல வந்து எதையோ இயக்கியிருக்கிறார்.  இந்த பவுசில் படத்திற்கு இரண்டாம் பாகமும் இருக்கிறதாம் இரண்டாம் பாகம் வருமா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்து விடுகிறது

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் மண்டை சூடு பிடிக்கும் அளவிற்கு சத்தத்தை எழுப்பி  இருக்கிறார்.

கல்கி 2898  A D- கமல் பேச்சு போல் புரியாத புதிர்.

 

 

 

Related posts

கிராம சபை கூட்டம் நடத்த வலியுறுத்தி கமல் ஹாசன் ஆட்சியரிடம் மனு

Jai Chandran

செய்தி துறை அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் மனு

Jai Chandran

83 வயது நம்பிராஜன் கதை நாயகனாக நடிக்கும் அஸ்திவாரம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend