Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

செ .ஹரி உத்ராவின் “கலைஞர் ஐயா” ஆல்பம் வீடியோ பாடல்

“தெரு நாய்கள்” “படித்தவுடன் கிழித்துவிடவும்” “கல்தா” பட இயக்குனர் செ.ஹரி உத்ரா, கலைஞர் திரு.மு.கருணாநிதி பற்றிய ஆல்பம் பாடலை எழுதி தயாரித்து வரும் ஜூன் 3 அன்று கலைஞர் அவர்களின் பிறந்தநாளை போற்றி வாழ்த்தும் விதமாக உருவாக்கியுள்ளார். இப்பாடலுக்கு இசையமைத்து AJ அலி மிர்ஸாக் மற்றும் VFX சேர்ப்பு வேலைகளையும் கிஷோர்.M தொகுத்துள்ளார்.

தொடர்ந்து 5 முறை சட்டமன்ற அமைச்சராகவும் ஈ.வெ.ரா.பெரியார் மற்றும் அண்ணாவின் நன் மதிப்பை பெற்றும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நல் நண்பராகவும், தமிழ் திரையுலகில் பராசக்தி தொடங்கி ஏராளமான படங்களில் தன் தமிழ் வசனத்தின் மூலமாக தமிழக மக்களின் நீங்கா புகழுக்கு சொந்தக்காரரான கலைஞர் கருணாநிதி. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது, மத்தியில் இடஒதுக்கீடுக்கு வித்திட்டது. சிறுபாண்மையினருக்கு சலுகைகள், கைரிக்ஷவை ஒழித்தது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மீனவர்களுக்கு இலவச குடியிருப்பு, கிராமங்களுக்கு தார்சாலை திட்டம், ஏழைகளுக்கு திருமண உதவித்திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், உழவர் சந்தை திட்டம் என பல்வேறு செயல்களின் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா புகழ் பெற்று இன்றளவும் போற்றப்படும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் திரு.மு.கருணாநிதி மட்டுமே…

இத்தகைய பெருந்தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்களுக்காக “கலைஞர் ஐயா” எனும் தலைப்பில் அவரின் சாதனைகளை வாழ்த்து பாடலாக வெளியிடுவது தனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என திரைப்பட இயக்குனர் செ.ஹரி உத்ரா கூறுகிறார்.

மேலும் இந்த “கலைஞர் ஐயா” பாடலில் 2021 சட்டமன்ற தேர்தலில் பெருவாரியாக தமிழகத்தில் வெற்றி வாகை சூடிய கலைஞர் கருணாநிதியின் மகனும் தற்போதைய தி.மு.க வின் தலைவராகவும் தமிழக முதலமைச்சராகவும் பதவி வகித்து கொண்டு இந்த கொரோனா நோய் பேரிடர் காலத்தில் மிக சிறப்பான ஆட்சி தந்து கொண்டிருக்கும் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை பற்றிய சில வரிகளும் பிரத்யேகமாக ஸ்வாரசியப்படுத்தி பாடலில் உருவாக்கியதாக திரைப்பட இயக்குனர் செ.ஹரி உத்ரா தெரிவித்துள்ளார்.

இந்த பாடல் “நடுசென்டர் டிவி” YouTube வலைதளத்தில் ஜூன் 3 அன்று காலை 11 மணிக்கு காணொளி வெளியிடப்படும் என இப்பாடல் உருவாக பொருளாதார ரீதியாக தயாரித்த I Creations மற்றும் “உத்ரா அறக்கட்டளை” சார்பில் “கலைஞர் ஐயா” பாடலை எழுதி தயாரித்த திரைப்பட இயக்குனர் செ.ஹரி உத்ரா கூறியுள்ளார்..

Related posts

Victory Venkatesh New Movie Venky 75

Jai Chandran

டைரி (பட விமர்சனம்)

Jai Chandran

Thrilling Teaser of The Bed Starring Srikanth

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend