Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் (ஆங்கில பட விமர்சனம்)

படம்: ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்

நடிப்பு: ஸ்கர்லட், ஜோஹன்சன் மெஹர்ஷஹாலா அலி, ரூபட் பிரண்ட் உள்ளிட்ட பலர்..

இசை:அலெக்சாண்டர்

ஒளிப்பதிவு: ஜான் மத்தியசன்

இயக்கம்: காரத் எட்வர்ட்

பிஆர்ஓ ( தமிழ் பதிப்பு) சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

ஜுராசிக் பார்க் பட வரிசையில் ஏழாவது படமாக உருவாகி வெளி வந்திருக்கிறது ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் (Jurassic World Rebirth) திரைப்படம். 2022 இல் வெளியான ஜுராசிக் டொமோனியன் தொடர்ச்சியாக இப்படம் உருவாகி இருக்கிறது.

காரத் எட்வர்ட் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகர்கள் ஸ்கர்லட், ஜோஹன்சன் மெஹர்ஷஹாலா அலி, ரூபட் பிரண்ட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கதை: 2010 ல் அண்டார்டிக் கடல் பகுதியில் டைனோசர்கள் மாற்று இன சேர்க்கை செய்து புதிதாக ஒரு இனத்தை உருவாக்கும் ஆராய்ச்சி கூடத்தை விஞ்ஞானிகள் நடத்துகிறார்கள். திடீரென்று ஏற்படும் விபத்தில் அந்த ஆய்வுக்கூடம் அழிகிறது. இந்நிலையில் மருந்து நிறுவனம் ஒன்று ஈகுவெடார் பகுதியில் வாழும் மூன்று வகை ராட்சத டைனோசர்கள் உடலில் இருந்து ரத்த சாம்பில்கள் எடுத்து அதிலிருந்து மனித உயிர்களை காக்கும் மருந்து உருவாக்க திட்டமிடுகிறது. ஈக்வெடார் பகுதிக்கு செல்ல தடை இருப்பதால் மருந்து நிறுவன தரப்பில் சட்டவிரோதமாக ரகசிய திட்டம் ஒன்று தீட்டப்படுகிறது. அதன்படி ஒரு சிலர் மட்டும் குழுவாக சேர்ந்து குறிப்பிட்ட ஈகுவெடார் பகுதிக்கு சென்று டைனோசர்களின் ரத்த மாதிரிகளை சேகரிக்க திட்டமிட்டு புறப்படுகிறார்கள். அந்தக் குழு அப்பகுதிக்கு சென்றடைந்தார்களா, டைனோசர்களின் ரத்த சாம்பில்களை எடுக்க முடிந்ததா என்பதற்கு த்ரிலாக பதில் சொல்கிறது படம்.

ஏற்கனவே வெளிவந்த ஜுராசிக் பார்க் படம் எப்படி ஒரு பரபரப்பை கிளப்பியதோ அந்த வரிசையில் உருவாகி வந்திருக்கிறது ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்.

தரை, கடல், வானில் வாழும் மூன்று வித்தியாசமான டைனேசர்களின் ரத்த மாதிரிகளை சேகரிக்க ஸ்கர்லட், ஜோஹன்சன் மெஹர்ஷஹாலா அலி, ரூபட் பிரண்ட் உள்ளிட்ட குழு கடலில் பயணம் புறப்பட்டதும் சிறிது நேரத்திலேயே டைனோசர்களின் அட்டகாசம் ஆரம்பமாகிவிடுகிறது.

பெரிய படகுக்கு சமமான நீளத்துடன் கடலில் நீந்தி வரும் டைனோசர்கள் கூட்டம் கப்பலை கவிழ்ப்பதும், அதில் வரும் நபர்களை கவ்வி லபக்கென்று வாயில் போடுவதுமாக மிரட்டல் தொடங்குகிறது.

காட்டுப்பகுதியில் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் சாதுவான டைனோசர்களின் ரத்த மாதிரிகள் அவைகள் கொஞ்சிக் குலவிக் கொண்டிருக்கும்போது எடுப்பது சுவாரஸ்யம்.

கழுகு வடிவில் இருக்கும் ராட்சத டைனோசர் ஸ்கர்லட் குழுவை துரத்தி துரத்தி கொத்துவது திகில்.

கிளைமாக்சில் வரும் அந்த பெரிய டைனோசர் ஹெலிகாப்டரை கவ்விப்பிடித்து தூக்கி வீசுவது பரபரப்பு.

மலைப்பகுதிகள், கடல் பகுதிகள், வனப்பகுதிகள் என பசுமை நிறைந்த காட்சிகள் ஜான் மத்திய சன் கேமரா வழியாக கண்களை கொள்ளையடிக்கின்றன. அதேபோல் டைனோசர்  பிளிறல் அலெக்சாண்டர் இசையில் காதுகளை படபடக்க வைக்கிறது.
இப்படம் 3 டி வடிவில் திரைக்கு வந்திருக்கிறது.

யுனிவர்சல் பிக்சர் படத்தை வெளியிட்டிருக்கிறது.ஆங்கிலம் தவிர தமிழிலும் படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது ரசிகர்களை கவரும்.

Related posts

Ygee Mahendra in his 60th year on Stage

Jai Chandran

துபாய் எக்ஸ்போவில் ஜோதிகா. நடித்த காற்றின் மொழி திரையீடு

Jai Chandran

Draupathi Devi From Draupathi 2 Unveiled

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend