Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜங்கில் குரூஸ் (ஆங்கில பட விமர்சனம்)

படம்: ஜங்கில் குரூஸ்

நடிப்பு:  டினைன் ஜான்சன், எமிலி ப்ளண்ட், எட்கர் ராமிரெஸ், ஜாக் வைட் ஹால், ஜெஸ்ஸி ப்ளமென்ஸ், பால் ஜியாமிடி

தயாரிப்பு: ஜான் டேவிஸ், ஜான்ஃபாக்ஸ், டிவைனே ஜான்சன், ஹிராம் கார்ஷியா, [யோ ஃபிளின்

கதை: க்ளன் ஃபிஹரா  ஜான் ரிக்வ்வா, மைக்கேல் க்ரீன்

திரைக்கதை: க்லன் ப்ஹாரா, ஜான் நிவ்வா

இயக்கம்: ஜவ்மே கொலெட் செர்ரா

ஹாலிவுட் பேண்டசி பட வரிசையில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம். அடர்ந்த காடுகள் நிறைந்த அமேசானின் மர்ம்மான இடத்தில் நிலவின் கண்ணீர் என்ற மரத்தில் பூக்கும் பூவின் ஒரு இதழ் கிடைத்தால் அதைக்கொண்டு உயிர்களை காப்பாற்ற முடியும் என்ற பழங்கால கதையொன்றை அறிந்து அந்த பூவின் இதழை எடுத்து வ்ரச் செல்கிறார் எமிலி ப்ளண்ட். அவருக்கு உதவியாக அவரது தம்பியும் செல்கிறார்.  அமேசான் காட்டுபகுதிக்குள் தன்னைஅழைத்துச் செல்லவ்தற்காக படகோட்டி  டிவைன் ஜான்சனை தேர்ந்தெடுக்கிறார். பணத்துக்காக பயங்கரமான காட்டுப்பகுத்திக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொள்கிறார். அடர்ந்த காட்டுப்பகுதியில்  காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்லும் இந்த குழுவையே வில்லன் குழு ஒன்று பிந்தொடர்கிறது. நிலவின் கண்ணீர் பூவிதழை எடுக்கும்நேரத்தில் வில்லன் கூட்டம் டிவைன் ஜான்சன் குழுவை சுற்றி ம்வலைக்கிறது. வில்லன் கூட்டத்திடமிருந்து அவர்களால் பூவின் இதழை கொண்டு வர முடிந்ததா என்பதை சுவாரஸ்யமாக விளக்குகிறது படம்.

ஹாலிவுட் படங்கள் ஒன்று கற்பனைக்கெட்டாத விஞ்ஞானத்துடன் கதைகள் அமைக்கப்பட்டிருக்கும், அல்லது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பழங்காலத்தின் பாரம்பரிய மர்மங்களை உள்ளடக்கியதான பேண்டஸி படமாக இருக்கும்/ அதில் ஜங்கில் குரூஸ் இரண்டாவது ரகம்.

நூற்றாண்டு கணக்கில் வாழும் டிவைன் ஜான்சன் ஒரு சஸ்பென்ஸ் பாத்திரமாக அறிமுகமாகிறார். நிலவின் கண்ணீரை எடுக்க வரும் கதாநாயாகி எமிலியை காட்டுபகுதிக்ஃஅள் அடர்ந்த நீர்விழ்ச்சி பகுத்தி அழைத்துச் செல்ல பேசும் பேரம் சுவாரஸ்யம் தீடீரென்றுவரும் புலியுடன் சண்டை போடுகிறார். மனிதர்களை திண்ணும் காட்டு வாசிகளிடம் அவர்களின் பாஷையில் பேசி ஆச்சர்யப்ப்டுத்துவது என பல கில்லாடித்தனமான வேலைகளை செய்திருக்கிறார்.

ஹீரோயின் எமிலியின் சுறுசுறுப்பும், வேகமும் காட்சியை ராகெட் வேகத்தில் பறக்க விடுகிறது. டிவைன் ஜான்சனை நம்பாமல் அவ்ரை ச்டந்தேக கன்ணோடு பார்க்கும்பேதெல்லாம் கலகலப்பு ஏற்படுத்துகிறார்.

மற்றபடி சிறுத்தை புலி, சாபத்தைல் விமோசனம் கிடைக்காமல் சுற்றும் பாம்பு தேனி மனிதன் என படம் முழுக்கு ஒரே ஆச்சர்யம் படரவைக்கின்றனர்.

இயக்குனர் ஜவ்மே கொலெட் செர்ரா   பழங்கால கதையையும் சுவைபட இயக்கி உள்ளார். காட்டு வாசிகளின் இருப்பிடம், நிலவின் கண்ணீர் மர அரங்கு என படத்தில் போடப்பட்டிருக்கும் அரங்குகள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. .

ஜங்கில் குரூஸ்-மர்மங்களுடன் கூடிய ஜாலியான அமேசான் பயணம்.

 

 

Related posts

The perfect Weekend Blast your speakers now

Jai Chandran

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் முதல் இந்தி படம் ரிலீஸ் தேதி

Jai Chandran

4 மொழிகளில் உருவாகும் ஃபேன்டஸி த்ரில்லர், மாயன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend