Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஆறாவது நிலம் (பட விமர்சனம்)

படம்: ஆறாவது நிலம்
நடிப்பு: நவயுகா குகராஜாஹ, ஜீவேஸ்வரன் அன்பரசி, மன்மதன் பாஸ்கி
தயாரிப்பு: ஐ பி சி தமிழ் புரடக்‌ஷன்
இசை: சிந்தகா ஜெயகொடி
ஒளிப்பதிவு: சிவா சாந்தகுமார்
இயக்கம்: அனந்த ராமன்
தமிழி ஈழப் போர் பற்றிய உணர்வுப் பூர்வமாக பல படங்கள் வந்துள்ளன. ஆனாலும் போர் ஓய்ந்து பல வருடங்கள் கடந்தும் அதன் பாதிப்பு இன்றும் அங்கு இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. வெளிநாடுகளுக்கு அகதிகளாய் சென்றவர்கள் பல்லாயிரம் பேர். ஆனால் இன்னமும் தாய்நாடு என்ற உணர்வுடன் பல தமிழ் குடும்பங்கள் ஈழத்தில் அவதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை படையினரிடம் சரண் அடை ந்து காணாமல் போன் கணவனை ஆண்டு கணக்கில் தேடி வருகிறார் ஒருபெண். இவர்களது மகள் தமிழ், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். கணவனை ஒருபுறம் தேடும் பெண் மற்றொரு புறம் தங்கள் நிலத்தில் ராணுவத்தினர் புதைத்துவைத்த கன்னிவெடிகளை அகற்றும் குழுவில் இணைந்து அவைகளை அகற்றும் பணி கவனிக்கிறார். ஆண்டுக்கணக்கில் நடக்கும் இந்த இரண்டு பணிகளுக்கும் என்று விடை கிடைக்குமோ என்ற ஏக்கத்துடன் காலத்தை கடத்தும் அப்பெண்ணுக்கு சில இடையூறுகள் வருகின்றன. ஒன்றை சமாளித்து வெளியில் வரும்போது மற்றொரு பிரச்னை அவளை தொடர்கிறது. தீராத இப்பிரச்னையை தத்ரூபமாக ஆறாவது நிலம் படம் விளக்கு கிறது.
படமாக இது எடுக்கப்பட்டிருந்தாலும் பக்கத் திலிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வே காட்சிக்கு காட்சி மேலோங்குகிறது. கணவனை தேடும் பெண்ணாக நவயுகா குகராஜாஹ யதார்த்த நடிப்பு மனதில் உருக்கத்தை ஏற்படுத்துகிறது.


அகண்ட மணற்பரப்பில் கோடாளியை கையில் எடுத்து அதன் நுனியை மட்டும் லேசாக மண்ணில் உரசி மணலை அகற்றி வெடிகளை அகற்றும் காட்சி திக் திக் திக்.
மகளாக நடித்திருக்கும் ஜீவேஸ்வரன் அன்பரசி எந்த நட்பும் இல்லாமல் தனிமையில் பொழுதை கழிப்பது உருக்கம். விளையாடும்போதும் இன்னொருவருக்காக தானே விளையாடி ஆறுதல் அடையும்போது அவரின் கதாபாத்திரம் உருக்கத்தை ஏற்படுத்துகிறது.
கன்னிவெடிகளை அகற்றும் குழுவின் தலைவராக வரும் மன்மதன் பாஸ்கி, நவயுகாவின் தாயாக வரும் மூதாட்டியும், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட யாருமே கதாபாத்திரத்திலிருந்து விலகாமல் காட்சியோடு ஒன்றிப்போயிருக்கின்றனர்.
ஐ பி சி தமிழ் புரடக்‌ஷன் தயாரித்துள்ள இப்படத்தை அனந்த ராமன் பல வலிகளை உள்ளடக்கிய கதையாக படமாக்கி இருக்கிறார்.
சிந்தகா ஜெயகொடி காட்சிகளை மீறிவிடாமல் இசையை கவனமாக கையாண்டிருக்கிறார்.
இரவு, பகல் என கிடைத்த ஒளியை பயன்படுத்தி சிவா சாந்தகுமார் செய்திருக்கும் ஒளிப்பதிவு உயிரூட்டுகிறது.
தியேட்டரில் வெளியிடமுடியாத நிலையில் இப்படத்தை வலை தளத்தில் வெளியிடுகின் றனர்.
ஆறாவது நிலம்- நிலமிழந்த தமிழ் உறவுகள் தங்களது நிலத்தை மீட்க சிறு துளியாக உதவும்.

Related posts

DEVIFOUNDATIONS International Elders Day..

Jai Chandran

மரிஜுவானா (விமர்சனம்)

Jai Chandran

Team Riseeastcre wishing Producer PentelaSagar

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend