Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் விமர்சனம்

ஜெ பேபி (பட விமர்சனம்)

படம் ஜெ.பேபி

நடிப்பு: ஊர்வசி, தினேஷ், மாறன், சபீதா ராய், இஸ்மத் பானு, மெலடி டார்கஸ்,  தாட்சாயினி  மாயாஶ்ரீ

தயாரிப்பு: பா
ரஞ்சித்தின் நீலம்.புரடக்சன்

இசை: டோனி பிரிட்டோ

ஒளிப்பதிவு: ஜெயந்த் சேதுமாதவன்

இயக்கம்: சுரேஷ் மாரி

பி ஆர் ஒ: குணா

ஐந்து பிள்ளைகளை பெற்றவர் ஜெ.பேபி (ஊர்வசி)  கணவர் இறந்த பின்னர் ஐந்து பிள்ளை களையும் வளர்த்து ஆளாக்குகி றார். ஆனால் அண்ணன் தம்பிக்குள் ஏதோ ஒரு விஷயத்தில் சண்டை ஏற்பட அவர்கள் பேசாமல் இருக்கி றார்கள். இந்த நிலையில் மனதளவில் பாதிக்கப்பட்ட தாய் ஜெ பேபி காணாமல் சென்று விடுகிறார். அவர் மேற்கு வங்காளத்தில் இருப்பதாக தகவல் வருகிறது. இந்த விஷயத்தை செந்தில் (மாறன்), சங்கரிடம் (தினேஷ) கூறி தாயை அழைத்து வர இருவரையும் கொல்கத்தா அனுப்பி வைக்கிறது போலீஸ். ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசாமலிருக்கும் இருவரும் ஒன்றாக ரயிலில் கொல்கத்தா செல்கின்றனர். அங்கு சென்று விசாரிக்கும் நிலையில்  மீண்டும் தாய் காணாமல் சென்று விடுகிறார்.  அண்ணன், தம்பி இருவரும் ரயிலில் ஊர் திரும்பி  வருகின்ற னர். ஊரை நெருங்கும்போது,  காணாமல்போன  தாய் கிடைத்து விட்டார்  அவரை வந்து அழைத்துச் செல்லுங்கள் என்று தகவல் வருகிறது. அதைக் கேட்டு  இருவரும் மீண்டும் கொல்கத்தா செல்கின்றனர். அங்கே தாயை சந்திக்கிறார்கள் . ஆனாலும் அவரை உடனடியாக அழைத்து வர முடியாமல் சட்ட சிக்கல் ஏற்படு கிறது அந்த சட்ட சிக்கலில் இருந்து தாயை மீட்டு எப்படி  தங்கள் ஊருக்கு அவரை  அழைத்து வருகிறார்கள் என்பதை நெகிழ்ச்சியாக,  சொல்கிறது ஜெ பேபி கிளைமாக்ஸ்.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் ஜெ பேபி  படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெ பேபி வேடத்தில் ஊர்வசி நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்பதை விட அந்த கதாபாத்திர மாகவே மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். உடல் மொழி, மன மொழி,   பேச்சு வழக்கை மாற்றி  நடித்து துவம்சம் செய்திருக்கிறார்.

வயதான காலத்தில் தனக்கு யாரும் ஆதரவு இல்லையே என்று வெளியில் சொல்ல முடியாத ஒரு மன உளைச்சல் ஊர்வசியின் மனதில் தாண்டவும் ஆடுவதை அவர் ஆடும் நடிப்பு தாண்டவத்தில் உணர முடிகிறது.

போலீசை பார்த்து மிரட்டுவது,  எனக்கு இந்திரா காந்தியை தெரியும்,  ஸ்டாலினை தெரியும், ஜெயலலிதாவை தெரியும் என்று சொல்லி ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது,  யாராவது ஏமாந்தால் கதவுக்கு பூட்டு போட்டுவிட்டு தவிக்க விடுவது என்று ஊர்வசி செய்யும் அலப்பறைகள் அரங்கை அலற விடுகிறது.

மேற்கு வங்காளத்துக்கு வழி தவறி சென்று விடும் ஊர்வசி அங்குள்ள ஒரு விடுதியில் அடைபட்டு கிடக்க பின்னர் அவரை பிள்ளைகள் தினேஷ்,  மாறன் மீட்டு அழைத்து வர முயற்சிக்கும் காட்சிகள் இயல்பாக படம் பார்க்கப்பட் டுள்ளது ஆங்காங்கே மாறன் தெளிக்கும் சிரிப்பு சிதறல்கள் அரங்கு முழுவதும் சில்லறையை சிதறவிட்டது போன்ற கலகலப்பை படரச் செய்கிறது.

 

தினேஷ் கொஞ்சம் வெயிட் போட்டு கதாபாத்திரத்துக்காக  உருவத்தை மாற்றி இருக்கிறார். நடிப்பையோ,  வசன உச்சரிப் பையோ மாற்றவில்லை.

மாறன் மனைவி,  தினேஷ் மனைவியாக  வரும் கதாபாத் திரங்கள். அரிதாரம்.பூசாமல்  கண் முன் நடமாடும் முகங்களாக  பதிகிறது..

ஊர்வசியை தேடிக் கண்டுபிடிக்க உதவும்  மிலிட்டரிக்காரர்   கவனத்தை ஈர்க்கிறார்.  இப்படிக் கூட உதவும் மனிதர்கள் இருக்கி றார்களா என சிந்திக்க வைத்து  பாராட்டை ஒட்டுமொத்தமாக அள்ளுகிறார்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஊர்வசி, தினேஷ்,  மாறன் ஊருக்கு புறப்படும்போது மிலிட்டரிக்காரர் கண் கலங்கி  வழியனுப்பும்போது கண்ணில் நீர் கசியும். ஆனால் இந்த காலகட்டத்தில் எத்தனை பிள்ளைகளுக்கு இது  பொருத்த மான கதையாக இருக்குமோ  தெரியவில்லை. அம்மா மீது இவ்வளவு பாசத்துடன்  இப்போது எந்த பிள்ளைகள் இருக்கிறார்கள்?

பா ரஞ்சித்தின் நீலம்  ப்ரொட க்ஷன்ஸ் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்ட படமாக தயாரித்திருக்கிறது

ரமேஷ் மாரி  எதார்த்தம் குறையாமல் இயக்கியிருப்பது  பிளஸ். நடிகர் நடிகைகளை  அனுபவ பாத்திரங்களாக மாற்றி காட்டி இருப்பதற்கான பாராட்டு   அரங்கில் கைதட்டல்களாக  எதிரோலிக்கிறது.

டோனி பிரிட்டோ ஒளிப்lபதிவு ஜெயந்த் சேதுமாதவன் இசை பக்கா.

ஜெ பேபி – மறுக்க முடியாத படம்.

 

 

Related posts

Dhoni, Sakshi Dhoni launch audio, trailer of LGM

Jai Chandran

21திரைப்பிரபலங்கள் வெளியிட்டுள்ள “சா” படத்தின் முதல் பார்வை

Jai Chandran

Consulates of various nations attended Spl screening of Dunki

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend