படம் : அரிமாபட்டி சக்திவேல்
நடிப்பு: பவன், மேக்னா ஹெலன், சார்லி, குட் லக் சுப்பிரமணியம், இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், அழகு, சேதுபதி ஜெயச்சந்திரன்
தயாரிப்பு: அஜிஸ் பி,
பவன்
இசை: மணி அமுதவன்
ஒளிப்பதிவு: ஜேபி மேன்
இயக்கம்: ரமேஷ் கந்தசாமி
பி ஆர் ஒ: யுவராஜ்
அரிமாபட்டி ஊரில் ஜாதி மாறி திருமணம் செய்தால் அந்த குடும்பத்தையே ஒதுக்கி வைத்து விடுகிறது ஊர் பஞ்சாயத்து. சிறுவயதில் காதலித்த பவன், ஹெலன் பதிவு திருமணம் செய்து கொள்கின்றனர். மாற்று ஜாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் பவனுக்கு ஊர் பஞ்சாயத்து பெரும் நெருக்கடி தருகிறது. பவன் தந்தையை பஞ்சாயத்தில் நிறுத்தி ஊர் மக்கள் கேள்வி கேட்கின்றனர். “உனக்கு ஊர் மக்கள் வேண்டுமா மகன் வேண்டுமா” என்று முடிவு செய் என்கிறார்கள். “ஊர் மக்கள் தான் வேண்டும்” என்று தந்தை சொல்ல இதையடுத்து பஞ்சாயத்து தலைவர்கள் பவன் தந்தைக்கு கட்டுப்பாடு விதிக்கி றார்கள். மகனுடன் பேசக்கூடாது, சொத்து எழுதி தரக்கூடாது, அவனை ஊருக்குள் அனுமதிக்க கூடாது என்ற கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு நீ ஊர் மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தண்டனை தர அதனை தந்தை ஏற்றுக்கொண்டு செய்கிறார்.. வெளியூரில் மனைவி யுடன் வசிக்கும் பவன் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைவதுடன் தன் தந்தையைக் காண ஊருக்கு வருகிறார்.. ஆனால் ஊர் மக்கள் அவரை அடிக்கின்றனர். அவர்களை திருப்பித் தாக்கி விட்டு ஊரிலிருந்து வெளியேறுகிறார் பவன். இந்த நிலையில் ஜாதி வெறி பிடித்த பெண் வீட்டு குடும்பத்தார் ஹெலன் மற்றும் பவனை பழி வாங்க ரவுடிகளை அனுப்பி வைக்கின்றனர். இதன் முடிவு என்ன? ரவுடிகளின் தாக்கு தலுக்கு ஹெலன் பலியானாரா?. மீண்டும் ஊருக்கு திரும்ப முடிந்ததா? பஞ்சாயத்து தண்டனையை ஏற்று அனுபவித்த பவன் தந்தை கதி என்ன ? என்ற பல்வேறு கேள்விகளுக்கு நிஜத்தின் பின்னணியில் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
இப்படத்தின் ஹீரோ பவன். அவரே படத்தையும் தயாரித்து இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் கதை நிஜத்தில் இவர் வாழ்வில் நடந்தது என்பதால் அவரே அந்த வேடத்தையும் ஏற்று நடித்திருக்கிறார்.
முசிறி பக்கத்தில் உள்ள ஒரு ஊரை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டு இருக்கி றது. இதில் வரும் காட்சிகள்போல் ஹீரோ பவன் இன்றைக்கும் தன் ஊருக்கு செல்ல முடியாத நிலையில் தான் இருக்கிறார் என்று அவரே கூறினார்.
தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்பதால் காட்சிகளை தத்ரூபமாக வடிவமைத்து அதில் தான் அனுபவித்த கொடுமைகளை கண்முன் நிறுத்துகிறார் பவன்.
தன் தந்தையை ஊர் மக்கள் பஞ்சாயத்தில் வைத்து அவமானப்படுத்தியதை அறிந்து ஊருக்குள் கோபமாக வரும் பவன் பஞ்சாயத்து நிர்வாகிகளை அடித்து துவம்சம் செய்வதில் ஆவேசம் தெரிகிறது.
பவனின் தந்தையாக சார்லி நடித்திருக்கிறார். யாரையும் எதிர்த்து பேசாத அப்பாவி தந்தை வேடத்தை இயல்பான நடிப்பின் மூலம் மெருகேற்றி இருக்கிறார் ஊர் பஞ்சாயத்தார் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் போது நெகிழ வைகிரார்.
பஞ்சாயத்து நிர்வாகியாக குட்லக் சுப்ரமணியம் நடித்துள்ளார்.
பவனை மணக்கும் ஹெலன் தன் காதலில் உறுதியாக இருப்பது காட்சிகளுக்கு உரம் சேர்க்கிறது.
ஹெலன் அண்ணனாக நடித்திருக்கும் பிர்லா போஸ் சாதித் திமிரை கோபம் வரும் அளவுக்கு வெளிப்படுத்தி வேடத்தை வில்லத்தனம் ஆக்கி இருக்கிறார்.
அஜிஸ் பி, பவன் படத்தை த்யாரித்திருக்கின்றனர்.
இயக்குனர் ரமேஷ் கந்தசாமி எந்த காம்பிரமைசும் செய்யாமல் காட்சி களை. உண்மை சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்று இயக்கி கண்முன் நிறுத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஜே.பி.மேன் ஊர் வாசனை குறையாமல் படமாக்க அதற்கேற்ற இசையை மணி அமுதன் வழங்கி உள்ளார்.
2024 ம் ஆண்டில் இப்படிக்கூட ஒரு ஊர் இருக்கிறதா என்று நம்பமுடியவில்லை என்றாலும் அந்த ஊரின் சாட்சியாக ஊரை விட்டு விலக்கி வைகப்பட்டுள்ள ஹீரோ பவன் சாட்சியாக இருப்ப தால் நம்பாமல் இருக்க முடியவில்லை.
அரிமாபட்டி சக்திவேல் – சமூக அவலத்தின் அடையாளம்.

