Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

இறைவன் (பட விமர்சனம்)

படம்: இறைவன்

நடிப்பு: ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன், விஜயலட்சுமி, ஆசிஷ் வித்யார்த்தி, ராகுல் போஸ், சார்லி,  வினோத் கிஷன், அழகம் பெருமாள், பகவதி பெருமாள்

தயாரிப்பு: சுதன் சுந்தரம்

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: ஹரி கே வேதாந்தம்

இயக்கம்: ஐ.அஹமத்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா (D’one) ரேகா, நாசர்

நகரில் கன்னிப் பெண்கள்  அடுத்தடுத்து கடத்தப்பட்டு கொடூர மாக கொலை செய்யப்படுகின் றனர். இதனால் மக்கள் அச்சம் அடைகின்றனர். சைக்கோ கொலைகாரனை பிடிக்க போலீஸ் வலை வீசி தேடுகிறது. போலீஸ் அதிகாரி அர்ஜுன்  (ஜெயம் ரவி) தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி கொலைகாரனை பிடிக்கிறார். இந்நிலையில் கொலைகாரனால் அர்ஜுன் நண்பர் கொல்லப்படுகிறார். இதனால் தனது வேலையை அர்ஜுன் ராஜினாமா செய்கிறார். சிறையிலிருக்கும் சைக்கோ கொலைகாரன் தப்பி மீண்டும் தொடர் கொலையில் ஈடுபடுகி றான் . வேலையை ராஜினாமா செய்தாலும் கொலைகாரனை கண்டுபிடிப்பதில் மீண்டும் தீவிரம் காட்டுகிறார் அர்ஜுன். அதேசமயம் நாம் பிடிக்க வேண்டியது  இன்னொரு  கொலைகாரனைத் தான் அவன் தான் உண்மையான  சைக்கோ என்று சொல்கிறார். யாரும் நம்ப மறுக்கிறார்கள்  இறுதியில் நடப்பது என்ன சைக்கோ கொலைகாரனை அர்ஜுன் பிடித்தாரா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

சைக்கோ திரில்லர் படங்கள் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால் இது நிஜ சைக்கோவின்  வெளிப்பாடாகவே உருவாக்கப் பட்டிருக்கிறது. தொடக்கம்.முதலே சைக்கோ கொலைகாரன் அடாவடி தொடங்கி விடுகிறது. பெண்களை கடத்திச் சென்று கண்களை தோண்டி, கை கால்களை வெட்டி. கழுத்தை அறுத்து கொலை செய்யும் கொடூரம் அல்லு விட்டுப் போகிறது.

சைக்கோ கொலைகாரனாக வரும் ராகுல்.போஸ் பார்வையிலேயே மிரட்டுகிறார் . பெண்களை எந்த காரணமும்.இல்லாமல்.கடத்தி வந்து கொல்வது சினிமாத்தன மாக உள்ளது.

கொடூரமான கொலைகாரனை பிடிக்க அதிரடியான போலீஸ் தேவை ஆனால் ஜெயம் ரவிக்கு போலீஸ் வேடம் கொடுத்துவிட்டு அவர் கைகளை இயக்குனர் கட்டிபோட்டிருக்கிறார் . கஷ்டபட்டு சைக்கோவை பிடித்து தருகிறார் ஆனால் அவன் எளிதாக தப்பிச் சென்று விடுகிறான்.

இரண்டாவது சைக்கோவாக வருபவர்  என்ன ரகம் என்று தெரியவில்லை. எந்த போலீஸை பார்த்தும் பயப்படாதவர் ஜெயம் ரவியை பார்த்தால்.மட்டும் நடுங்கு கிறார். எல்லா போலீசுக்கும் மத்தியிலேயே அந்த கொலை காரன் ஜெயம் ரவியை ஏளனம் செய்வதும் அவரை ரவி அடிக்கப் பாய்ந்தால் உடனே போலீசார் ரவியை தடுத்து கொலைகாரனை அனுப்பி வைப்பதும் பொறுமை யை சோதிக்கிறது.

நயன்தாரா அதிரடியாக ஆக்ஷன் செய்வார் என்று பார்த்தால் ரவி பின்னால் சுற்றி தன்னை காதலிக் கும்படி கெஞ்சுவதும் ஆனால் அதை ஏற்காமல் ரவி மிஞ்சுவதும்  கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற.கதையாக இருக்கிறது.

நயன்தாரா வாங்கிய சம்பளத் துக்கு வேலை பார்க்கவில்லை. இயக்குனரும் அவரிடம் சரியாக வேலை வாங்கவில்லை.

தொடக்கம்.முதல் இரத்தம் இரத்தம் என்று இரத்த ஆறு.ஓடுகிறது. இயக்குனர் ஐ. அஹமத்  சைக்கோ கதையை இப்படி கவனக்குறை வாக இயக்கியது ஏனோ.

யுவன் சங்கர் ராஜாவும் ஈடுபாடுடன் இசை அமைத்தாரா என்பது சந்தேகமாக உள்ளது.  பாடல்களை ஒன்றுக்கு இரண்டு.முறை.கேட்டால்.மனதில் பதியலாம்.

ஒளிப்பதிவாளர் ஹரி கே வேதாந்தம் இயக்குனர் என்ன கேட்டாரோ அதை படம் பிடித்து தந்திருக்கிறார்.

இறைவன் – சைக்கோவின் கொடூரம்.

Related posts

Kaml beginning the third phase of election campaign from today

Jai Chandran

கசட தபற வெற்றி, இயக்குனர் சிம்புதேவன் அறிக்கை

Jai Chandran

RedSandal movie team started dubbing process today!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend