Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

இந்த கிரைம் தப்பில்ல ( பட விமர்சனம்)

படம்:இந்த கிரைம் தப்பில்ல

நடிப்பு: ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா  ஏலன், முத்துக்காளை,  வெங்கட் ராவ்
கிரேசி கோபால், காயத்ரி

தயாரிப்பு: மனோஜ் கிருஷ்ணசாமி

இசை: பரிமளவாசன்

ஒளிப்பதிவு: ஏ எம் எம் கார்த்திகேயன்

இயக்குனர்: தேவகுமார்

பி ஆர் ஒ: சதீஷ் (AIM) சிவா

 

நீதி தவறி தப்பிழைத்து தப்பிப்ப வர்களுக்கு தனி ஒருவன் தண்டனை தருவான். இதுதான் இந்த படத்தின் கதை. அந்த தனி ஒருவனாக ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார்.

பாண்டி கமல் எதார்த்த சக மனிதனாக இருந்தாலும்   தவறு நடக்கிறதென்று தெரிந்தால் ஆடுகளம் நரேன் கட்டளையை ஏற்று தவறு  செய்பவர்களை அடித்துக் கொல்வதில் முறைப்படி சட்டம்  தன் கடமையை செய்கிறது என்று சொல்ல.முடியாவிட்டாலும் சட்டத்தின்படிதான் தண்டனை வழங்கப்படுகிறது என்பதை உணர்துகிறார்.

தெரிந்த முகம் நரேன் மட்டும்தான் அவரையும் லேப் டாப் முன் உட்கார வைத்து விட்டு முறைத்துப் பார்க்கச் சொல்லி இருப்பதைவிட  அவரும் இறங்கி இரண்டு சம்பவங்கள் செய்ய வாய்ப்பளித் திருந்தால் காட்சிகள் நினைவில் நின்றிருக்கும்.

மேக்னா ஏலன் கொழு கொழு வென்று வருகிறார். நடனம்  ஆடுவதற்கும் , டூயட் பாடுவதற்கும் பயன்பட்டிருக்கிறார்.   முத்துக் காளை வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை.

பிரபாகரன் போட்டோவை காட்டி படத்தை தொடங்கும்போது இது இலங்கை தமிழர் கதையாக இருக்கும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.  ஆனால் எல்லாம் தமிழகத்தில் நடக்கும் சகஜமான சம்பவங்களாக மாறிவிட்ட  அவலங்களை தட்டிக்கேட்க ஒருவன் தேவை என்பதை காட்சிகள் உணர்த்துகின்றன. எப்படியாவது மக்களுக்கு ஒரு மெசேஜை சொல்லிவிட வேண்டும் என்று இயக்குனர் தேவகுமார் துடிப்பு தெரிகிறது ஆனால் அதை உணர்ச்சிகரமாக, கோர்வையாக, தெளிவாக, துணிச்சலாக சொல்ல வேண்டிய கட்டாயம்.இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தால்  ஒன்றுக்கு இரண்டு முறையல்ல ஒன்றுக்கு  பத்து முறை  இந்த ஸ்கிரிப்டை திருத்தி மாற்றி அமைத்திருப்பதுடன் சில தெரிந்த முகங்களையும் முக்கிய பாத்திரங் களில் நடிக்க வைத்திருக்கலாம்.

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் மட்டும்போதாது அதை எப்படி மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்ற   திரைக்கதையும்  அவசியம்.

படத்தின் ஆரம்ப காட்சியும், இறுதி காட்சியும் ஒரு நிமிடம் ஆடியன்சை நிலைக்குத்த  வைக்கிறது.  அதற்கேற்ற தீனிதான் இல்லை. நேரடியாக இயக்குனர் தேவகுமார் பொள்ளாச்சி சம்பவத்தை.முதல் முயற்சியாக செய்திருக்கலாம் .

மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்திருக்கிறார்.  பரிமள வாசன் இசையும் பாடல்களும் அனல் தகிக்கிறது ஆனால் அதற்கான படப்பிடிப்பு இல்லை. எல்லாமே  மாண்டேஜ் என்றிருந்தால் எப்படி உணர்வது.

ஒளிப்பதிவாளர் ஏ எம் எம் கார்த்திகேயன் இன்னும் கவனம் கவரும் கோணங்களை கையாண் டிருக்ககலாம்.

பட குழுவுக்கு  உள்ள உள்ளுணர்வு புரிகிறது அதை முழுமையாக படத்தில் பிரதிபலிக்காதது ஏமாற்றம். அடுத்த முயற்சி இதே உணர்வுடன் வேறுகோணத்தில் கோபம், சென்டிமென்ட் தெறிக்க சொல்ல வேண்டியது முக்கியம்.

இந்த கிரைம்.தப்பில்லை -! சட்டம் தன் கடமையை செய்ய  வேண்டிய   கட்டாயத்தை இப்படம்  உருவாக்கி இருக்கிறது. இல்லாவிட்டால் சட்டத்தை கையிலெடுப்பவர்கள் உருவாக்குவார்கள்  என்ற எச்சரிக்கையும் தருகிறது..

 

Two And A Half Star Rating Illustration Vector

 

 

 

Related posts

‘ChinnanjiruKiliyae’ won Achievement Award at DIFF

Jai Chandran

Mallu Girl” from “Varalaru Mukkiyam” a sensational hit!

Jai Chandran

ChiyaanVikram’s Cobra

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend