Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லும் இந்திய படம்

இந்திய சார்பில் 95வது ஆஸ்கர் விருதுக்காக இந்திய சார்பில் அனுப்பப்படவுள்ள திரைப்படத்தை அறிவிக்கும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பினில் இந்திய திரைப்பட சங்கத்தின் தேர்வு குழுவினர் பங்கு கொண்டு தேர்வு செய்த படத்தினை அறிவித்தனர்.

இந்த தேர்வுக்குழுவினில்

1 டி.எஸ். நாகபரணா (தலைவர்) –
2 கமலேஸ்வர் முகர்ஜி
3 அஞ்சன் போஸ்
4 தசங்கீத் சிவன்
5 ஜதின் பண்டிட்
6 நிகத் மரியம் நீருஷா
7 ராஜேஷ் பெட்னேகர்
8 மாந்தர் கமலாபுர்கர்
9 மனிஷ் சைனி
10 அஜித் சிங் ரத்தோர்
11 பிரதீக் குப்தா
12 பவன் வடேயார்
13 பிஜோன் தாஸ்குப்தா
14 .ஷிரபானி தியோதர்
15 தரம் குலாட்டி
16 பிரமிளா ஜோஷ்
17 ராஜேஷ்
18  சந்தான பாரதி
19 ரென்ஜி பனிகர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த சந்திப்பினில்…

தயாரிப்பாளர் ரவி கொட்டாரகரா பேசியதாவது..

இந்திய சார்பில் வருடர்த்திற்கு 4000, 5000 படங்கள் எடுக்கப்படு கிறது. மிக சிறந்த கதைகள் படைப்புகள் இக்காலத்தில் எடுக்கப்பட்டுகின்றன. 1929 ல் ஆஸ்கர் விருது விழா துவங்கப் பட்டது ஆனால் அப்போது வெளி நாட்டு படங்கள் ஏற்காத நிலை இருந்தது. ஆனால் இப்போது இந்த நிலை மாறியுள்ளது. ஆஸ்கருக்கு இந்தியாவில் இருந்து தரமான படங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த வருடம் தேர்தெடுக்கப்பட்ட படத்தினை தலைவர் அறிவிப்பார்.

தலைவர் நாகாபரணா (தலைவர்) பேசியதாவது…

இங்கு இந்த விழாவில் பங்கு கொண்து மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக இருக்கிறது. ஆஸ்கர் விருது தேர்வுக்கு 13 படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. பல மொழி களில் இருந்து பல சிறந்த திரைப்  படங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி யாக குஜராத்தி திரைப்படம் ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ) படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழிக்கான இந்திய ஆஸ்கார் நுழைவுத் தேர்வைத் தேர்ந்தெடுத் ததற்காக  இயக்குநர் டி.எஸ். நாகபரணா ஜூரி வாரியத்தின் சார்பாக கௌரவிக்கப்பட்டார்.

பல சிறந்த படைப்புகளில் இருந்து ஒருமனதாக ஆஸ்கர் விழாவிற்கு ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ) என்ற தலைப்பில் படம் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் வாழ்வில் சினிமாவின் அருமையை சொல்வது மட்டுமின்றி ஒவ்வொரு திரைப்பட ரசிகனின் உணர்வுகளை கூறும் சிறந்த படைப்பாக உருவாகி யுள்ளது. இப்படம் இந்திய மரபையும், பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது, இது வெளிநாட்டு பார்வையாளர் களுக்கு இந்தியாவின் முகத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.

ஆஸ்கார் நுழைவுக்கு பரிசீலிக்கப்பட்ட படங்கள்

மொத்தம் -13 படங்கள்
இந்தி-6
01-பதாய் தோ
02-ராக்கெட்ரி
03-ஜுண்ட்
04-பிரம்மாஸ்திரம்
05-தி காஷ்மீர் ஃபைல்ஸ்
06-அனெக்

திமாசா (அசாம்)-1
செம்கோர்

தமிழ்-1
இரவின் நிழல்

குஜராத்தி-1
செலோ ஷோ

தெலுங்கு-2
ஆர்ஆர்ஆர்
ஸ்தலம்

மலையாளம்-1
அரியுப்பு

பெங்காலி-1
அபராஜிதோ

Related posts

Teja Sajja’s Mirai Releasing Worldwide On August 1st

Jai Chandran

சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும் பட படப்பிடிப்பு நிறைவு

Jai Chandran

நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்து வாழ்த்திய முதல்வர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend