Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்”: அட்லீ டைரக்‌ஷன்

ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட், நிறுவன தயாரிப்பில் மெகா ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகும் பிரமாண்டமான ஆக்‌சன் எண்டர்டெயினர் திரைப்படம் “ஜவான்”.  திரைத்துறை கண்டிராத வகையில், உயர்தர ஆக்சன் காட்சிகளுடன், இந்திய சினிமாவின் பெரும் கலைஞர்கள் இணைந்து பணியாற்ற,  பிரமாண்ட பொருட்செலவில் அற்புதமான படைப்பாக இப்படம் உருவாகிறது.

ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தென்னிந் தியாவில் வெற்றிகரமான பிளாக்பஸ்டர் படங்களை தந்த இயக்குனர் அட்லீ, தற்போது இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஜவான்’ மூலம்  மீண்டும் தனது மேஜிக்கை மீண்டும் நிகழ்த்த வுள்ளார். ரசிகர்களின்  அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ஷாருக்கான் ஒரு முரட்டுத்தன மான பின்னணியில், காயம் மற்றும் கட்டுகளால் மூடப்பட்டி ருக்கும் டீசர் வீடியோ இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், திரைப்படத்தின் தன்மையை படத்தின் தொனியை ரசிகர்களுக்கு சொல்வதாக அமைந்துள்ளது, இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது.

Link – https://bit.ly/JawanAnnouncement

படம் குறித்து ஷாருக்கான் கூறுகையில், “ஜவான்” திரைப்படம்  மொழி, நிலப்பரப்பு தாண்டி அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு உலகளாவி

இந்த தனித்துவமான திரைப்படத்தை உருவாக்கு வதற்கான பெருமை அட்லீயை தான் சேரும், ஆக்‌சன் படங் களை விரும்பும் எனக்கு இந்த படம் ஒரு அற்புதமான அனுபவ மாக இருந்தது! எங்கள் திரைப்படத்தின்  ஒரு முன்னோட்டமாக இந்த  டீசர் இருக்கும். இந்த டீசர் திரைப்படம் பற்றிய ஒரு பார்வையை  ரசிகர்களுக்கு அளிக்கும்.

ஜவான் படத்தை உருவாக்கு வது குறித்து இயக்குநர் அட்லீ பேசுகையில், “ஜவான்” உணர்வுப்பூர்வமான டிராமா, ஆக்‌சன் என எல்லாம் கலந்த திரைப்படமாக இருக்கும். பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க விரும்புகிறேன், அவர்கள் அனைவரும் ஒன்றாக ரசிக்கக் கூடிய ஒரு திரைப்படத்தையும், முன் எப்போதும் இல்லாத வகையில் ஷாருக்கானை சிறப்பாகவும் காட்ட முயற்சித் துள்ளேன். என்றார்.

ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ‘ஜவான்’  திரைப் படத்தை ஷாருக்கான் கதாநாய கனாக நடிக்க, கௌரி கான் தயாரிக்கிறார். “ஜவான்” திரைப்படம் ஜூன் 2, 2023 அன்று ஐந்து மொழிகளில் ஷாருக்கானின் முதல் பான் இந்திய படமாக வெளியிடப் படுகிறது.

ஜவான் திரைப்பட அறிவிப்பை யடுத்து,  அடுத்த ஆண்டில் ஷாருக்கான் மேலும் டங்கி, பதான் ஆகிய படங்களின் மூலம் பார்வையாளர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் விருந்தளிக்க உள்ளார்.

ரெட் சில்லிஸ் எண்டர்டெயின் மெண்ட் பற்றி: ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் (RCE) 2002 இல் நிறுவப்பட்டது, அன்றிலிருந்து, இந்த நிறுவனம் பல தளங்களில் உயர் தரமான பொழுதுபோக்கு களை உருவாக்கும் வகையில் நிலையான வளர்ச்சி பாதையில் உள்ளது. ரெட் சில்லிஸ் எண்டர்டெயின் மெண்ட் உள்ளடக்க மேம்பாடு, தயாரிப்பு, உலகளாவிய சந்தைப்படுத்தல் போன்ற பணிகளையும்,  ரெட் சில்லீஸ்  VFX மூலம் விஷுவல் எஃபக்ட்ஸ் மற்றும் போஸ்ட் புரடக்‌சன் போன்ற பணிகளை யும் செய்து,  நாட்டின் முன்னணி ஸ்டுடியோக்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

Related posts

விலங்கு (ஜீ 5 வெப் சீரீஸ் விமர்சனம்)

Jai Chandran

Rajini’s Vettaiyan set to unfold on October 10th

Jai Chandran

பஞ்சு அருணாச்சலம் 80: பிளாக் ஷீப், பி ஏ ஆட்ஸ் நடத்தும் விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend