படம்: தேவரா
நடிப்பு: என் டி ஆர், ஜான்வி கபூர், சயீப் அலிகான், பிரகாஷ்ராஜ்,, ஶ்ரீகாந்த், கலையரசன், ஷைனி டாம் சாக்கோ, நரேன்
தயாரிப்பு:! என்டிஆர் ஆர்ட்ஸ் அண்ட் யுவசுதா ஆர்ட்ஸ்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு: ஆர் ரத்தினவேல்
இயக்கம்: கொரட்டால சிவா
பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, (D’ one), நாசர்
குற்றவாளி ஒருவனை பிடிப்பதற்காக செங்கடல் பகுதிக்கு போலீஸ் மாறுவேடத்தில் வருகிறது. கப்பலில் வரும் பல கோடி மதிப்புள்ள சரக்கை கடலுக்கு அடியிலேயே கடத்தித் தர வேண்டும் அப்படி செய்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக சயீப் அலியிடம் ஆசை காட்டுகின்றனர். அவர் அவர்களை துரத்துகிறார். பின்னர் அதே பகுதியில் இருக்கும் வயது மூத்த பிரகாஷ்ராஜிடம் விசாரிக்கின்றனர். அவர் அப்பகுதியில் கடலுக்கு அடியில் கடத்தலை யாரும் செய்வதில்லை அதற்குக் காரணம் தேவரா என்று கடந்த கால தேவரா என் டி ஆர் கதையை கூற ஆரம்பிக்கிறார். ஊரில் . யாரும் கடத்தலில் ஈடுபடக்கூடாது என்று என்டிஆர் கட்டுப்பாடு விதிக்கிறார். அதை மீறி சயீப் அலிகான் ஆட்கள். கடத்தலில் ஈடுபட முயல்கின்றனர். அவரது ஆட்களை கடலிலேயே வைத்து தீர்த்துகட்டுகிறார் அத்துடன் தான் மறைவிடத்தில் பதுங்கி இப்படி தாக்குதல் நடத்துவேன் என்று மிரட்டுகிறார். இதனால் பயப்படும் கிராமத்தினர் யாரும் கடத்தலில் ஈடுபட மறுக்கின்றனர். ஒரு தலைமுறையே பயத்தில் வளர்கிறது .சயீப். அலிகான் மறைந்திருக்கும் தேவரா என்.டி.ஆரை கொல்வதற்கு. ஒரு ரவுடி பட்டாளத்தை வளர்க்கிறார். இதற்கிடையில் தேவரா eன் டி ஆரின் மகன் வரா ( மற்றொரு என் டி ஆர்) பயந்தாங்கொள்ளியாக வளர்கிறார். ஒரு கட்டத்தில் மறைந்திருந்து கொல்லும் தேவரா என்.டி.ஆரை கொல்வதற்கு தனது ரவுடி பட்டாளத்துடன் வரா என் டி ஆரையும் உடன் அனுப்புகிறார். சயீப். அதன் பிறகு கடலில் என்ன நடக்கிறது, தன் மகன் வராவையே தேவரா என்டிஆர் கொல்கிறாரா என்பதற்கு அதிர்ச்சியான பதில் அளிக்கிறது தேவரா. கிளைமாக்ஸ்
நீண்ட நாட்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் சோலோவாக நடித்து வந்திருக்கும் படம் தேவரா என்பதால் அவரது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அவர்களுக்கு சரியான தீனியாக படத்தை பிரமாண்டமாக அதிரடி ஆக்ஷனுடன் தந்திருக்கிறார் என்.டி ஆர்.
ஒவ்வொரு ஆக்சன் காட்சிகளிலும் அதிரவிட்டிருக்கிறார் ஜூனியர் என்டிஆர். முழுக்க முழுக்க கடல் மற்றும் காட்டுப்பகுதியை ஒட்டிய லொகேஷனில் காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதால் எவ்வளவு ரத்தம் தெறித்தாலும் குளுமையும் பசுமையும் அதை விகாரமாக காட்டவில்லை.
ஜூனியர் என்டியாருக்கும், ஜான்வி கபூருக்கும் இடையான ரொமான்ஸ் கலகலப்புடன் நகர்கிறது. பாடல் காட்சியில் இருவரும் செம ஆட்டம் போட்டு கவர்கின்றனர்
ஜான்வி கபூர் . வேறு யாருமல்ல 80ஸ் காலகட்டத்து கனவு கன்னி ஸ்ரீதேவி மகள். ஓரளவுக்கு ஸ்ரீதேவியின் சாயல் தெரிஞ்சாலும் நடிப்பிலும் நடனத்திலும் இன்னும் தேர்ச்சி தேவை. ஆனால் கவர்ச்சி போதுமான தூக்கலாக இருக்கிறது.
என்டிஆர் ஆர்ட்ஸ் அண்ட் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கின்றன.
கொரட்டால சிவா ஜூனியர் என்டிஆருக்கு ஒரு அசத்தலான வெற்றி படமாக தேவராவை இயக்கி அளித்திருக்கிறார்
ரத்தினவேலு கேமரா கடலிலும் காட்டுப்பகுதியிலும் வானத்திலும் கடலுக்கு அடியிலும் பறந்து மூழ்கி காட்சிகளை படமாக்கி பிரமமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அனிருத் ரவிச்சந்தர் இசை காட்சிகளில் வேகம் கூட்டுகிறது.
தேவரா – கடலில் மூழ்கி எழுந்து வந்த ஆக்ஷன் அனுபவம்.

.
