ஜெயலலிதா வாழ்கை வரலாறாக உருவாகும் ’தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார் கங்கனா ரனாவத். இப்படத்தை ஏஎல்.விஜய் இயக்குகிறார்.
மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டது பற்றி கங்கனா கருத்து தெரிவித்தபோது இந்தி நடிகர்களின் வாரிசுகள் புறக்கணிப்புதான் சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் என்றார். மேலும் மகாராஷ்டிரா முதல்வர் மகன் பற்றி கருத்து கூறினார். பின்னர் மும்பையிலிருந்து கங்கனா மனாலி சென்று தங்கினார். அங்கு துப்பாக்கி சூடு நடந்ததாக கங்கனா கூறி இருக்கிறார்.
’கடந்த வெள்ளிக்கிழமை என் வீட்டு காம்பவுண்ட் சுவர் அருகே மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். இரண்டு முறை துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டது. அரசியல்வாதி பற்றி நான் பேசியதால் என்னை மிரட்டுவதற்கால இந்த காரியத்தை உள்ளுர் கட்சிக்காரர்கள் குண்டர்களை வைத்து இப்படி செய்திருக்கிறார்கள். இது குறித்து போலீஸில் புகார் அளித்திருக்கிறேன், தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த்தும் இதுபோல் மிரட்டப்பட்டிருக்கலாம்’ என்றார் கங்கனா.
குளு போலீசார் கங்கனா வீட்டை சுற்றி சோதனை நடத்தினர். பிறகு அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.