Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி பாகம் 3 (ஆங்கில பட விமர்சனம்)

படம்: கார்ட்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி – பாகம் 3

நடிப்பு: கிறிஸ்ட் பட், ஜோயி சால்ட்னா, தேவ் பவுடிஸ்டா, கரென் கில்லன், போம் கில்மெண்டிப், வின் டீஸல், பிராட்லே கூப்பர், சீன் கன், எலிசபெத் டிபெக்கி, சிவர்ஸ்டர் ஸ்டேலோன்

தயாரிப்பு: மார்வெல் ஸ்டுடியோஸ்

இசை:ஜான் மர்பி

ஒளிப்பதிவு: ஹென்றி பிரஹாம்

இயக்கம்: ஜேம்ஸ் கன்

கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி  பட தொடரின்  மூன்றாம் பாகமாக இது உருவாகியிருக்கிறது. வழக்கமான பாத்திரங்களும் கூடுதலான சில பாத்திரங்கள் இணைக் கப்பட்டிருக் கின்றன. உலகை காக்கப் போராடும் பாதுகாவலர்கள் டீமில் உள்ள பெருசாலி (ராக்கெட்) திடீரென்று தங்கள் இருப்பிடத் துக்குள் நுழைந்து துவம்சம் செய்யும் முரட்டு மனிதனுடன் மோத அவனது தாக்குதலில் ராக்கெட் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுகிறது. உடனிருக்கும் கார்டியன் நண்பர்கள் ராக்கெட்டை காப்பாற்ற முயல்கின்றனர். ஆனால் ராக்கெட் உடலில் செய்யப்பட்டுள்ள நுணுக்கமான செயற்கை இணைப்பு களை ஆக்டிவேட் செய்ய முடியாமல் தவிக்கின் றனர். ராக்கெட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் அதை உருவாக்கிய மற்றொரு கிரகத்தின் தலைவனிடமிருந்து சரியான பாஸ் வேர்டுடன் கூடிய பொருளை எடுத்து வர வேண்டும் அதற்கான முயற்சியில் கார்டியன்கள் ஈடுபடுகின்றனர் அந்த போராட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? ராக்கெட் பெருச் சாலி உயிர் பிழைத்ததா என்பதற்கு படம் ஆரவார கிராபிக்ஸ், விஎப்க்ஸ் தொழில் நுட்பத்துடன் விளக்குகிறது.

இதுபோன்ற படங்கள் கனவில் காணும் காட்சி கள் போலத்தான் பார்க்க வேண்டும். பூமிக்குள் நடக்கும் விஷயங்கள் எதுவும் இதில் இல்லை எல்லாமே வேற்று லகத்தில் நடக்கும் மோதல்களாக வே அமைக்கப்பட்டிருக்கிறது. வினோத உருவங் களுடன் வரும் எல்லா கதாபாத்திரங்களும் நம்மையும் வேற்றுலக வாசியாக மாற்றிவிடுகிறது.

தான் படைத்த உலகை அழித்து விட்டு வேறு உலகத்தை உருவாக்க எண்ணும் வில்லனுடன் காட்டியன்கள் மோதுவது பிரமிப்பு.

கிறிஸ்ட் பட், ஜோயி சால்ட்னா, தேவ் பவுடிஸ்டா, கரென் கில்லன், போம் கில்மெண்டிப், வின் டீஸல், பிராட்லே கூப்பர், சீன் கன், எலிசபெத் டிபெக்கி, சிவர்ஸ்டர் ஸ்டேலோன் என மேலும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின் றனர். சில பெரிய ஸ்டார்கள் சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கார்டியன் ஆப் கேலக்ஸி கதாபாத்திரங்கள் இறுதியில் முற்றிலுமாக விடை பெற்று பிரிவதால் இதுவே இப்படத்தின் கடைசி பாகமாக அமைந் திருக்கிறது எனலாம்.

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்தி ருக்கிறது

ஜான் மர்பி இசை காட்சிகளை கனமாக்கியிருக்கிறது

ஒளிப்பதிவாளர் ஹென்றி பிரஹாம் இயக்குனர் ஜேம்ஸ் கன் கூட்டணி பிரமாண்டத்தை சாத்தியமாக்கியிருக்கிறது.

கார்டியன்
ஆப் தி கேலக்ஸி – மலைப்பு.

 

Related posts

Pushpa First Single on AUG 13th

Jai Chandran

Maya movie is out now.

Jai Chandran

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி.. அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend