Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது

பாகுபலி-2 விநியோக நிறுவனமான கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது.

பல வெற்றிப்படங்களை வெளிநாடுகளில் விநியோகித்துள்ள கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், எஸ்டிஆர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடவுள்ளது. அங்குள்ள 150-க்கும் மேற்பட்ட இடங்களில் மாநாடு வெளியாகும்.

பாகுபலி-2 திரைப்படத்தை 1000-க்கும் அதிகமான திரைகளில் 2017-ம் ஆண்டு வெளியிட்ட கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தை 2022 ஜனவரியில் விநியோகிக்க உள்ளது.

2021-ம் ஆண்டில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட படங்களை கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் விநியோகித்துள்ளது. பெருந்தொற்றின் போது தற்காலிகமாக மூடப்பட்ட திரையரங்குகள் 2021-ல் மீண்டும் திறக்கப்பட்ட போது, அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்களில் முதல்முறையாக தென்னிந்திய திரைப்படங்களை வெளியிட்டதும் கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் நிறுவனமே ஆகும்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தில் இது வரை ஏற்றிராத வேடத்தில் எஸ்டிஆர் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷினி கதாநாயகியாக நடிக்க, காவல் அதிகாரி பாத்திரத்தை எஸ் ஜே சூர்யா ஏற்றுள்ளார்.

அதிரடி ஆக்‌ஷன் திரில்லரான மாநாட்டில் அறிவியல் புனைவும் உண்டு. வி ஹவுஸ் புரொடக்‌ஷனின் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

2001-ம் ஆண்டு தனது வெளிநாட்டு விநியோக பயணத்தை ஆரம்பித்த கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், அயல்நாட்டு திரைப்பட விநியோகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒரு முன்னணி நிறுவனமாகும்.

பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, பல இந்திய திரைப்படங்களை அமெரிக்காவில் வெளியிட்டிருப்பதோடு, நமது படங்களின் பிரிமியர் காட்சிகளை முதல்முறையாக அந்நாட்டில் கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் அறிமுகப்படுத்தியது.

தரவுகள் மற்றும் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் திட்டமிட்டு சரியான நேரத்தில் சரியான இடங்களில் திரைப்படங்களை வெளியிடும் நிபுணத்துவம் கிரேட் இந்தியா ஃபிலிம்ஸுக்கு உண்டு. மேலும் விவரங்களுக்கு www.greatindiafilmsusa.com எனும் இணையதளத்தை பார்க்கவும்.

Related posts

லட்சத்தீவில் நிம்மதி திரும்ப வேண்டும் மநீம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை..

Jai Chandran

“மாலைநேர மல்லிப்பூ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Jai Chandran

கூழாங்கல் பெற்றுத் தந்த பெருமை: விக்னேஷ் சிவன் பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend