தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருந்தது. நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
கடந்த ஏப்ரல் 10-ந் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில் கட்டுப்பாடுகளை அரசு படிப்படியாக தளர்த்தி வந்தது. தியேட்டர்களுக்கும் கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி இருக்கிறது.
அதன்படி வரும் பிப்ரவரி 16-ம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அதேசமயம் மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.