Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் மறைவு: மகன் உருக்கமான கடிதம்

இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் மறைவு: மகன் உருக்கமான கடிதம்
பிரபல இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் மறைவு குறித்து அவரது மகன் ஜி.என்.குமரவேலன் உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியதாவது:
அப்பாவை நேசித்தவர்கள்‌ இத்தனை பேரா என்பதை, இன்று வரை
விடாமல்‌ அடித்து கொண்டிருக்கும்‌ என்‌ தொலைபேசி பறை
சாற்றுகிறது. என்‌ இழப்பை தங்கள்‌ விட்டு இழப்பாக கருதி, அப்பா
இறந்த செய்தியை பல ஊடகங்களில்‌ கொண்டு சென்ற
அனைவருக்கும்‌ நன்றி.
திட்டமிடுதல்‌ என்பது நான்‌ அப்பாவிடம்‌ கற்று கொண்ட ஒரு விஷயம்‌.
அது ஒரு படப்பிடிப்பாகட்டும்‌, இல்லை தன்னுடைய இறுதி யாத்திரை
ஆகட்டும்‌, எல்லாமே அழகாக யோசித்து நேர்த்தியாக திட்டமிடுவது
அப்பாவின்‌ பலம்‌.
படப்பிடிப்பை அப்பா, திட்டமிடும்‌ விதத்தை நேரில்‌ பார்த்து பிரமித்த
எனக்கு, அவர்‌ தன்‌ இறுதி யாத்திரை எப்படி இருக்க வேண்டும்‌ என்று
என்னிடம்‌ கூறிய பொழுது, மகனாக நொறுங்கி போனேன்‌.
எங்கு தன்னை வைக்க வேண்டும்‌, என்ன உடுத்த வேண்டும்‌,
வருபவர்களை எப்படி நடத்த வேண்டும்‌…இன்னும்‌
என்னென்னமோ…எனக்குத்தான்‌ கேட்க மனதளவில்‌ தைரியமில்லை…

நினைப்பதெல்லாம்‌ நடந்து விட்டால்‌…பாழாய்‌ போன கோரோனா,
உயிர்களை மட்டும்‌ பறிக்கவில்லை, மனிதர்களின்‌ கடைசி
நிமிடங்களையும்‌ கொன்று விடுகிறது.

நம்முடன்‌ பழகிய, நம்முடன்‌ பயணித்த, நம்முடம்‌ வேலை செய்த,
நமக்கு வாழ்வு கொடுத்த ஜி.என்‌.ரங்கராஜனை பலர்‌ கடைசியாக பார்க்க
முடியாமல்‌ செய்து விட்டது கோரோனா.
நேரில்‌ வர முடியாவிட்டாலும்‌, அப்பாவை கடைசியாக பார்க்க
முடியாமல்‌ போன உங்கள்‌ வலியை உணர்கிறேன்‌…நிச்சயம்‌ அப்பாவின்‌
அன்பும்‌ ஆசியும்‌ என்றும்‌ உங்களுக்கு இருக்கும்‌.

இன்பத்தில்‌ ஒன்று கூடவும்‌, துன்பத்தில்‌ தோள்‌ கொடுக்கவாவது
கொரோனா ஒழிய வேண்டும்‌.

அப்பா…நீங்கள்‌ வழிக்காட்டிய பாதையில்‌ பயணிக்கிறேன்‌., அருகில்‌

நீங்கள்‌ இருந்து என்‌ வாழ்வை திட்டமிட்டு என்னை வழி நடத்துவீர்கள்‌
என்ற நம்பிக்கையில்‌…
இவ்வாறு கூறி உள்ளார்.

Related posts

பூமாதேவிக்கே லஞ்சம் கொடுக்கிறார்கள்: விஷால்.குமுறல்

Jai Chandran

லாக் டவுன் டைரி படத்தில் ஸ்டன்ட் வீரர் ஹீரோவாக அறிமுகம்

Jai Chandran

JaiBhim Hindi Trailer out now

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend