படம் பிரண்ட்ஷிப்
நடிகர்கள் : ஹர்பஜன் சிங், ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் , லாஸ்லியா, சதிஷ் , JSK சதீஷ்குமார், எம்.எஸ். பாஸ்கர் , பழ .கருப்பையா ,வெங்கட் சுபா, ,வேல்முருகன், வெட்டுக்கிளி பாலா
தயாரிப்பு: ஜே பி ஆர் அண்ட் ஷர்மா சூர்யா
இணைத்தயாரிப்பு :- வேல்முருகன்
இசை: டி.எம் உதயகுமார்
ஒளிப்பதிவு: சாந்தகுமார்
இயக்கம்: ஜே பி ஆர் அண்ட் ஷர்மா சூர்யா
பொறியியல் கல்லூரியில் ஆண்கள் மட்டுமே படிக்கும் மெக்கானிக்கல் பிரிவில் படிக்க சேர்கிறார் லாஸ்வியா. அவரை எல்லோரும் வியப்பாக பார்க்கிறார்கள். வகுப்பு முழுவதும் மாணவர்கள் நிறைந்திருக்க இவர் ஒருவர் மட்டுமே அங்கு மாணவியாக இருக்கிறார். சக மாணவர்கள் ஹர்பஜன் சிங், சதீஷ் போன்றவர்களுடன் நட்பாக பழகி அவர்களின் நட்பையும் அன்பையும் பெறுகிறார். இந்நிலையில் அவருக்கு புற்று நோய் இருப்பதாக தெரியவர அனைவரும் சோகமாகின்றனர். ஒரு கட்டத்தில் அவர் கொல்லப்படுகிறார். அதிர்ச்சி அடையும் சக நண்பர்கள் லாஸ்வியாவை கொன்ற கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க முயல்கின்றனர். பழி அவர்கள் மீதே விழுகிறது. குற்றவாளியாக கோர்ட்டில் நிற்கும் அவர்களுக்காக வாதாட வருகிறார் வக்கீல் அர்ஜூன். மாணவர்கள் மிது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்களை பொய் என திரூபித்து உண்மை குற்றவாளியை அடையாளம் காட்டுகிறார்.
நட்பில் தொடங்கி, கொலையில்பயணமாகி கோட்டில் சென்று நிற்கிறது கதை. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முறையாக தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் நடிப்பிலும் நன்றாக ஷைன் ஆகிறார். சில காட்சிகளில் தடுமாறினாலும், நடனம், சண்டை என்று மேனேஜ் செய்துவிடுகிறார். ரஜினி ரசிகர் என்று கையில் நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டு ரசிக வட்டத்துக்கு தூண்டில் போட்டிருக்கிறார்.
காமெடி பேசி சிரிக்க வைக்கும் சதீஷ் இதில் உருகியும் அழுதும் நடித்து மனதில் பச்சக் ஆகிறார். நண்பர்களாக உடன் நடித்திருப்பவர்களும் நடிப்பில் தேர்ச்சி பெறுகின்றனர்.
பிக்பாஸ் புகழ் லாஸ்லியா தொடக்கம் முதலே துள்ளும் மான்போல் தாவி குதித்து நடந்து கவர்கிறார். சோசியலாக பழகி இளைஞர்கள் மனதில் இடம் பிடிக்க முயல்கிறார். திடீரென்று அவருக்கு கேன்சர் என்று சொல்லி கதையை செண்டிமெண்ட்டாக பார்த்திருக்கும் இயக்குனர்கள் பின்னர் கிரைம் கதைக்கு மாறியிருப்பது விறுவிறுப்பை கூட்டுகிறது.
நீதிபதியாக பழ கருப்பையா, வழக்கறிஞாராக எம் எஸ் பாஸ்கர் நடித்திருக்கின்றனர். எதிர்பார்க்காத சர்ப்ரைஸாக அர்ஜூன் ஆக்ஷனும் காட்டுகிறார். கோர்ட்டில் வசனத்தால் மோதி காட்சிகளையும் திசை திருப்புகிறார்.
டி.எம் உதயகுமார் இசை அமைத்திருக்கிறார். சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரண்ட்ஷிப்- கிரைம், நட்பு கலந்த கலவை.