கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். 2 ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்தும் தான் அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அமைத்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி அரசியல் கட்சி தொடங்கும் தேதயை அறிவிக்க உள்ளதாகவும் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன் என்று,ம் அறிவித்தார்.
இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி அண்ணாத்த படப்பிடிப்புக்கு ஐதராபாத் சென்றபோது படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிக்கும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. மருத்துவமனையில் தங்கி 3 நாள் சிகிச்சை பெற்று திரும்பினார்.
புதிய கட்சி தொடங்க எண்ணியிருந்த ரஜினிகாந்த் சமீபத்தில் கட்சி தொடங்கவில்லை, அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார். இந்நிலையில் ரஜினி மன்றத்தை சேர்ந்தவர்கள் மற்ற கட்சியில் சேர என்ணினர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: