Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எம் ஜி ஆர் நண்பர், முன்னாள் மந்திரி ஆர் எம் வீ உடலுக்கு அரசு மரியாதை

புரட்சித்தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த எம் ஜி ஆரின்உதவியாளர், நெருங்கியாயனானர். எம் ஜி ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம் ஜி ஆர், ரஜினிகாந்த் கமல்ஹாசன் m
நடித்த வெற்றி படங்களையும் தயாரித்திருக்கிறார் . இவர்.

ஜெயலிதகாட்சியிலும் ஆர் எம் வீரப்பன் அமைச்சராக பதவி வகித்தார். ஒரு கட்டத்தில் ஆர் எம் வீ மீது ஜெயலலிதாவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. இதையடுத்து. வயது. மூப்பின் காரணமாகவும் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 10ம் தேதி ஆர்.எம். வீரப்பனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை யில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனளிக் காமல் பிற்பகல் உயிரிழந்தார்.

ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்..

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு அரசு மரியாதை வழங்க தி மு தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிடப்பட்டார். நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம் செய்யப்படுகிற து.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசு மரியாதை வழங்க தேர்தல் ஆணையம்  ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அரசுமரியாதையுடன் ஆர் எம் வீ உடல் தகனம் நடந்தது

ஆர் எம் வீ வாழ்க்கை வரலாறு

அதிமுகதொண்டற்களால் ஆர்.எம்.வீ என்று அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன், புதுக்கோட்டை மாவட்டத்தின் வல்லதிராக் கோட்டை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஜி.ஆர். 1953-ம் ஆண்டில் துவங்கிய எம்ஜிஆர் நாடக மன்றம் மற்றும் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு நிர்வாக பொறுப்பாளராக ஆர்.எம்.வீரப் பனை நியமித்திருந்தார். இதன் பின்னர் 1963-ம் ஆண்டில் சத்யா மூவிஸ் என்ற பெயரில் ஆர்.எம்.வீரப்பன் திரைப்பட நிறுவனம் ஒன்றை துவங்கினார்.

இதைத் தொடர்ந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக வலம் வந்த ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாக இருந்தார். 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத போது, ஆர்.எம்.வீரப்பன் தேர்தல் பிரச்சாரங்களை ஒருங்கி ணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்ட போது, அதிகப்படியாக 98 எம்.எல்.ஏக்.களின் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகியை முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைக்க ஆர்.எம்.வீரப்பனின் பங்கு முக்கியமானதாக இருந்தது.

அதன்பிறகு அ.தி.மு.க ஒன்றுபட்ட போது, ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட நல்லிணக்கம் காரணமாக அவர் அ.தி.மு.க.வில் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு முறை சட்டப்பேர வைக்கும், மூன்று முறை சட்ட மேலவைக்கும் ஆர்.எம்.வீரப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர், இளைஞர் நலன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை இவர் வகித்துள்ளார்.

 

Related posts

ராணா டகுபதி வெளியிட்ட நாக பந்தம் ‘ பட ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

முதல்வரின் தகவல் பலகை மக்கள் பார்வைக்கு எப்போது? கம்ல்ஹாசன் கேள்வி

Jai Chandran

Sathuranka Vettai 2 theatrical release on Janaury 22.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend