கிராமத்து பின்னணியில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன் சுசீந்திரன் இயக்கி உள்ளார். நிதிஅகர்வால் ஹீரோயினாக நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடித்திருக்கிறார். இப்படத்துக்கு எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். பொங்கல் தினத்தில் ஜனவரி 14ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
ஈஸ்வ்ரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உல்ள ஆல்பட் தியேட்டரில் சமீபத்தில் நடந்தது. . ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். அதில் 3 பாடல்கள் திரையிடப்பட்டன. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.. படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளதாக அன்றைய தினம் தெரிவித்தார். அதன்படி நாளை மாலை 5.04 மணிக்கு ஈஸ்வரன் டிரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.