படம்: என்ன சொல்ல போகிறாய்
நடிப்பு: அஸ்வின், தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, புகழ்,
தயாரிப்பு: டிரைடண்ட் ஆர்ட்ஸ்
இசை: விவேக் மெர்வின்
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்
இயக்கம்: ஹரிஹரன்
பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா
ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கிறார் அஸ்வின். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்ய எண்ணும் அவரது தந்தை, அவந்திகா மிஸ்ராவை பெண் பார்க்கிறார். அஸ்வினுடன் பேசும் அவந்திகா காதலித்து அதில் தோல்வி அடைந்த ஒருவரைத் தான் திருமணம் செய்ய எண்ணுவதாக வித்தியாசமான தனது பாலிசியை முன்வைக்கிறார் அவந்திகா. உடனே அஸ்வின் தான் காதலித்து ஏமாந்தவன் என்கிறார். அப்படியென்றால் மாஜி காதலியை காட்டும்படி கேட்கிறார் அவந்திகா. இதற்காக தேஜு அஸ்வினியிடம் தனது காதலியாக நடிக்கும்படி கேட்கிறார். அவருக்கும் வீட்டில் பார்த்தநிலையில் எப்படியாவது அதை தவிர்க்கும் பொருட்டு அஸ்வின் காதலியாக நடிக்க சம்மதிக்கிறார். பல சந்திப்புகள் நடக்கும் நிலையில் உண்மையிலேயே தேஜு அஸ்வினி மீது அஸ்வினுக்கு காதல் மலர்கிறது. இறுதியில் இருவரில் யாரை மணக்கிறார் என்பதே கதை.
இளவட்டங்கள் வட்டமடிக்கும் காதல் கதை வந்து நீண்டநாள் ஆகிய நிலையில் 2கே கிட்ஸ்களின் காதல் கதையாக வந்திருக்கிறது என்ன சொல்லப் போகிறாய். முக்கோண காதல் கதைகள் ஏராளமாக ஏற்கனவே வந்திருக்கிறது. அந்த பாணியில்தான் இப்படமும் உருவாகி இருக்கிறது.
அவந்திகாவுக்காக தேஜு அஸ்வினியுடன் ஹீரோ அஸ்வின் காதல் விளையாட்டு நடத்துவது ருசிகரம். கதாபாத்திரத்துக்கு ஏற்ப அஸ்வினுக்கும் காதலிக்கும் வயது என்பதால் காட்சிகள் பொருந்திப் போகின்றன.
காமெடி நடிகர் புகழ் உடன் இணைந்து அஸ்வின் அடிக்கும் லூட்டிகள் காமெடி முயற்சி.
அவந்திகா மிஸ்ரா, தேஜு அஸ்வினி இருவரும் காதல் கிளிகளாக வருகின் றனர். இருவரும் தங்களது கதாபாத்திரங் களை உணர்ந்திருப்பதால் நடிப்பும் எடுபடுகிறது.
காட்சிகளில் இளமை துள்ளல் இருக்க வேண்டும் என்று இயக்குனர் ஹரிஹரன் எண்ணத்துக்கேற்ப பாடல் காட்சிகள் அமைந்திருக்கின்றன. இறுதியில் அஸ்வின் யாரை மணப்பார் என்ற டிவிஸ்ட் படத்துக்கு உயிரூட்டு கிறது. \
கலர்புல்லாக காட்சிகளை கண்கள் குளிர படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன்.
விவேக் மெர்வின் இரட்டையர்கள் இசை தாளம் போட வைக்கிறது.
வசனங்களை குறைத்து சென்டிமென்ட் மற்றும் காதல் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னொரு கட்டத்துக்கு உயர்ந்திருக்கும்
என்ன சொல்லப் போகிறாய் – 2கே இளவட்டங்களுக்கான காதல்.