தமிழக கட்டமன்ற தேஎர்தல் வரும் எப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது.
திமுக, அதிமுக, மநீம, அமமுக, நாம் தமிழர் கட்சி என அணிகள் தேர்தலில் நான்கு அணிகள் மோதிக்கொள்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள .234 தொகுதிகளில் நேற்று இரவு 7 வரை 3 ஆயிரத்து 293 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 2 ஆயிரத்து 721 மனுக்களும், பெண்கள் 571 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். மதுரை தெற்கு தொகுதியில்
அ.தி.மு.க. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொளத்தூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கோயில்பட்டியில் அ.ம.மு.க. பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன், கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய 5 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனரர். அதேபோல் சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுவை அளிததுள்ளனர்.
தேர்தலில் மக்கள் வாக்குகளை பெற்று ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் அனைத்து தலைவர்களும் தமிழக்ம் முழுவதும் சுற்றுப்ப்யணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.