Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டோரதி (பட விமர்சனம்)

படம்: டோரதி

நடிப்பு: கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், ராமச்சந்திரன் துரைராஜ், கஜராஜ், ஜீவா சுப்பிரமணியன், முத்துக்குமார்

தயாரிப்பு: ஜோதி தேஷ் பாண்டே, குனித் மூங்கா கபூர், அச்சின் ஜெயின்

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு: எஸ் திரு

இயக்கம்:: கார்த்திக் சுப்புராஜ்

பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா (D’One ), அப்துல் எ நாசர்

கதை : சிறு வயது முதல் கார்த்தி  (ரிஷிகாந்த் ), சுப்பு ( சனந்த் ) இருவரும் நட்போடு வளர்கிறார்கள். சுப்புவின் தந்தை ஜாதி வெறியர். தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை  ஆணவ கொலை செய்கிறார்.  தன் மகன் சுப்புவுடன் பழகும் கார்த்தியையும் வேறு ஜாதியை சேர்ந்தவராக பார்க்கிறார்  இந்நிலையில் வீட்டுக்கு வரும் மருமகள் டோரத்தி  (கீர்த்தி சுரேஷ்,) திடீரென இறக்கிறார் அதற்கும் தனது தந்தை தான் காரணம் என்று சுப்பு எண்ணும் நிலையில் அவரது உடலில் பெண்மைக்கான மாற்றங்கள் நிகழ்கிறது. இதனால் கோபம் அடைந்த தந்தை சுப்புவை கொல்லச் சொல்லி கார்த்தியிடம்  மிரட்டல் விடுத்து அனுப்புகிறார். கார்த்தி எடுத்த முடிவு என்ன? சுப்பு கதி என்னவாகிறது என்ற கேள்விகளுக்கு மாறுபட்ட பதிலை அளிக்கிறது டோரதி கிளைமாக்ஸ்.

தமிழில் இப்படி ஒரு படமா, அதுவும் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியிருக்கும் படமா? இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையா என்று அடுக்கடுக்கான ஆச்சரியம் மேலிட வைக்கும்  படமாக உருவாகியிருக்கிறது டோரதி

கதையில் முக்கிய திருப்பங்கள் அவ்வப்போது நிகழும் நிலையில் அதன் காட்சிகளை விளக்குவது படம் பார்க்கும்போது சுவாரஸ்யத்தை குறைத்து விடும் என்பதால் அந்த முக்கிய காட்சிகளை பற்றி இங்கு பேசுவது ஸ்பாய்லராக ஆகிவிடும் என்பதால் அதெல்லாம் இப்போதைக்கு சஸ்பென்ஸ் ஆக இருப்பது தான் நல்லது. முதல் முறை படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்படக்கூடிய அந்த ஆச்சரியமான உணர்வு அப்படியே கிடைக்க வேண்டும் என்பதால் இங்கு அது பற்றிய குறிப்புகள் கூட மௌனமாக கடப்பது சிறப்பு.

ரிஷிகாந்த்,  சனந்த் நிஜத்திலேயே நண்பர்கள் அவர்கள் இந்தப் படத்தில் நண்பர்களாக நடித்திருப்பது நடிப்பாக இல்லாமல் வாழ்க்கையின் துடிப்பாக வெளிப்படுவது காட்சிகளை நம்பும்படி செய்கிறது.

சனந்த்தை தேடி வரும்  ரிஷிகாந்த் அவர் சேலை அணிந்து கொண்டு நிற்கும் காட்சியை கண்டு அதிரும்போது அரங்கமும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் அமைதியாகிறது.

சனந்த் அசந்திருக்கும்போதெல்லாம்   அவரை கொல்வதற்காக ரிஷிகாந்த் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கி எடுத்து குறி பார்க்கும்போது எந்த நேரத்தில் தோட்டா சனந்த் உயிரை குடிக்க போகிறதோ என்ற படபடப்பு ஒவ்வொரு முறையும் நரம்புகள் ஊடே நடுக்கமாக பரவுகிறது.

கீர்த்தி சுரேஷ் எதிர்பார்க்காத ஒரு இன்ப அதிர்ச்சியாக வந்து செல்கிறார். அவர் என்ன செய்தார் என்பதையும் திரையிலேயே காணுங்கள்.

படத்தில் இன்னும் பல்வேறு கதாபாத்திரங்கள் உலா வருகின்றன எந்த பாத்திரமும் வீண் இல்லை.

இந்த படத்தை கமர்சியல் இயக்குனர் என்று பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியிருப்பது அவருக்குள் ஒளிந்திருக்கும்  சீர்திருத்த வாதியை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் பத்திரிக்கை செய்திகள் வாயிலாக அறிந்திருக்கிறோம். அது திரையில் கண்முன் நிகழும் போது கரவொலி எழுப்பி பாராட்ட வைக்கிறது. கிளைமாக்சில் “கடும் நெடும் பயணம்  முடித்து வைத்தது காதல்” என்று   திரையில்  வசனம் ஒளிர்கிறது.  அதற்கு அர்த்தம் என்ன என்பதை யோசியுங்கள்..  அதுதான் நிஜமா என்பதை திரையில் உறுதி செய்யுங்கள்

பல்வேறு படங்களை இதுவரை ஒளிப்பதிவு  செய்திருக்கும் திருவின் திரைப்பயணத்தில் இது உச்சமாக இருக்கும்.

சர்க்கரை  நாவில் இனிக்கும் என்பது இயற்கை அதுபோல் இளையராஜா இசை  மனதை  ஈர்க்கும் என்பதும் இயற்கை

டோரதி –  கடவுளின் பரிசை கண்முன் காட்டுகிறதுReview by K Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

Related posts

டப்பிங் பேசும் மாஸ்டர் ஆர்ணவ்

Jai Chandran

முதல்வராக பதவிஏற்றார் மு.க.ஸ்டாலின்.. 33 அமைச்சர்களும் பதவி ஏற்பு

Jai Chandran

கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend