Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமல் கட்சியிலிருந்து நிர்வாகிகள் திடீர் விலகல்..

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி துணைதலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். அவர் இன்று மாலை கட்சி அலுவலகத்துக்கு வந்து தனது ராஜினாமா கடிதத்தை தந்தார். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்து மக்கள் கமல்நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
உயிரே உறவே தமிழே,
பத்திரமாக இருக்கிறீர்களா?
‘சீரமைப்போம்‌ தமிழகத்தை எனும்‌ பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலைச்‌ சந்தித்தோம்‌. ஒரு பெரிய போரில்‌ திறம்பட செயல்பட் டோம்‌.
களத்தில்‌ எதிரிகளோடு துரோகிகளும்‌ கலந்‌திருந் தார்கள்‌ என்பதைக்‌
கண்கூடாகக்‌ கண்டோம்‌. ‘துரோகிகளைக்‌ களையெடுங் கள்‌’ என்பதுதான்‌ அனைவரின்‌ ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக்‌களைய வேண்டிய வர்களின்‌ பட்டியலில்‌ முதல்‌ நபராக இருந்தவர்‌ டாக்டர்‌ ஆர்‌. மகேந்திரன்‌. கட்சியில்‌ ஜனநாயகம்‌ இல்லை என்கிறார்‌. ஜனநாயகமும்‌ சமயங்களில்‌ தோற்றுப் போகும்‌ என்பதற்கு மிகப் பெரிய உதாரணம்‌ இவர்தான்‌.


முகவரி கொடுத்தவர்களின்‌ முகங்களையே எடுத்துக் கொள்ள துணிந்தார்‌.
கட்சிக்காக உழைக்கத்‌ தயாராக இருந்த பல நல்லவர்களைத்‌
தலையெடுக்க விடாமல்‌ செய்ததே இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களும்‌ திறமை இல்லாதவர்களும்‌ வெளியேறும்படி மக்கள்‌
நீதி மய்யத்தின்‌ கதவுகள்‌ திறந்தே இருக்கும்‌ என்பதை அனைவரும்‌ அறிவர்‌. தன்னுடைய திறமையின் மையும்‌, நேர்மையின்மை யையும்‌, தோல்வியையும்‌ அடுத்தவர்‌ மீது பழி போட்டு ‘அனுதாபம்‌’ தேட முயற்சிக்கிறார்‌.
தன்னை எப்படியும்‌ நீக்கி விடுவார்கள்‌ என்பதைத்‌ தெரிந்து கொண்டு
புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார்‌. ஒரு களையே தன்னைகளையென்று புரிந்து கொண்டு தன்னைத்தானே நீக்‌கக்கொண்டதில்‌ உங்களைப்‌ போலவே நானும்‌ மகிழ்கிறேன்‌. இனி நம்‌ கட்சிக்கு ஏறுமுகம்தான்‌. என்னுடைய வாழ்க்கையில்‌ அனைத்து விஷயங்களுமே
வெளிப்படையானவை. நான்‌ செய்த தவறுகளை மறைக்க வோ, மறுக்கவோ ஒருபோதும்‌ முயற்சித்தது இல்லை. என்‌ சகோதர சகோதரிகளான மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ குடும்ப உறுப்பினர்களுக்கு மனம்‌ தளரவேண்டாம்‌ என ஆறுதல்‌ சொல்ல வேண்டியதில்லை.
உங்களின்‌ வீரமும்‌ தியாகமும்‌ ஊர்‌ அறிந்தவை.

 


தோல்வியின்‌ போது கூடாரத்தைப்‌ பிய்த்துக் கொண்டு ஓடும்‌ கோழை களைப்‌ பற்றி நாம்‌ ஒரு போதும்‌ பொருட்படுத்திய இல்லை. கொண்ட கொள்கை யில்‌ தேர்ந்த பாதையில்‌ சிறிதும்‌ மாற்றமில்லை.
மண்‌ மொழி மக்கள்‌ காக்க களத்தில்‌ நிற்போம்

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் கமல்‌ ஹாசன்‌ தெரிவித்திருக்கிறார்.

Related posts

தேசிய விருது வென்ற நடிகை லட்சுமிபிரியாவுக்கு யாமா படக் குழு பாராட்டு

Jai Chandran

வீட்டுவசதித் துறை அமைச்சர் எஸ். முத்துசாமியிடம் பூச்சி முருகன் கோரிக்கை மனு

Jai Chandran

பேன்டசி படம் “பெண்டுலம்” படப்பிடிப்பு  தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend