கொரோனா பாதிப்பில் திமுக எம் எல் ஏ ஜெ அன்பழகன் மரணம்..
மு க.ஸ்டாலின், திரை யுலகினர் அஞ்சலி..
சென்னை ஜூன் :
தி மு கழக எம் எல் ஏ ஜெ.அன்பழகன். கடந்த 2-ந்தேதி மூச்சு திணறலால் அவதிப்பட்டார். உடனே அவர் குரோம்பேட்டை தனியார் மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடனடியாக டாக்டர்கள் அவருக்கு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது.
மூச்சு விட சிரமப்பட்ட அவருக்கு இருந்ததால் செயற்கை சுவாசம் அதாவது வென்டிலேட்டர் பொருத்தப் பட்டது.அவரது உடல் சிறிது முன்னேற்றம் அடைந்த நிலையில் மீண்டும் பின்னடைவு அடைந்தது.
தீவிர சிகிக்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் இன்று (ஜூன் 10) காலை 8.05 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.
பின்னர் அவரது உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை தி.நகரில் உள்ள வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது.
வீட்டிற்கு வெளியே சிறிது நேரம் அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு கண்ணம்மாபேட்டையில் மயானத்திற்கு உடல் எடுத்து செல்லப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.
ஜெ அன்பழகனின் அவரது தந்தை ஜெயராமன் சமாதிக்கு அருகில் 15 அடி ஆழம் குழி தோண்டப்பட்டு அதில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜெ.அன்பழகனின் உருவ படத்திற்கு திமுக தலைவர் முகஸ்டாலின், டிஆர் பாலு, டிகேஎஸ் இளங்கோவன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், மா.சுப்பிரமணியன் மற்றும் கடசி யின் மூத்த தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் திரையுகை சேர்ந்த டைரக்டரும், விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான டி.ராஜேந்தர். டைரக்டர் அமீர், நடிகர் ராகவா லாரன்ஸ்.தயாரிப்பாளர் எ எல் அழகப்பன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். அன்பழகனுக்கு இன்று பிறந்தநாள் பிறந்த நாளன்றே உயிர் பிரிந்தது.