2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடந்தது. கடந்த முறை சட்டமன்றத்தில் ஆளும் கட்சியாக அதிமுக, எதிர்கட்சி யாக திமுக, காங்கிரஸ் என 3 கட்சிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. இம்முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுடன் காங்கிரஸ், மதிமுக, பாமக, பாஜக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் , கொங்கு நாடு மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி என பல்வேறு கட்சியினர் சட்டமன்ற உறுபினர்களாக அவையில் அமரவிருக்கின் றனர்.
திமுக ஆளும் கட்சியாக ஆட்சிகட்டிலில் அமர எதிர் கட்சி வரிசையில் அதிமுக இடம்பெறுகிறது
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும் பான்மையாக 125 தொகுதி களில் வெற்றி பெற்றிருக் கிறது. மேலும் மதிமுக உள்ளிட்ட சில கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அதில் 8 வெற்றிப் பெற்றனர். அந்த வகையில் உதயசூரியனில் வெற்றிபெற்றவர்கள் 133 வேட்பாளர்கள் ஆவர்.
ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. இதில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி 18, இடதுசாரி கட்சிகள் தலா 2, மதிமு, விசிக தலா 4, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் – 4 இடங்களில் வெற்றி பெற்று உள்ளன.
அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தமாக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் அதிமுக கூட்டணி 75 இடங்கள் பெற்றது. தனிப் பட்ட முறையில் அதிமுக 65 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்ட்சி அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது. பாமக – 5, பாஜக – 4 இதர கட்சிகள் – 1 என வெற்றிபெற்றுள்ளன.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமான் தலைமை யிலான நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் தலைமை யிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டி யிட்ட எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
previous post