பிரபல டைரக்டர் செல்வா தந்தை பக்தவச்சலம் 85 இன்று காலை 7.15 மணியளவில் காலமானார். கொரோனா தொற்று காரணமாக பெரம்பூர் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இறந்தார்.
டைரக்டர் செல்வா குறிப்பு:
DD பொதிகை டி வி யில் பரபரப்பாக பேசப்பட்ட நீலா மாலா , சித்திரபாவை தொடர்களை இயக்கிய டைரக்டர் செல்வா இயக்கிய முதல் திரைப்படம் தலைவாசல். சூப்பர் ஹிட் ஆனது. அஜித்குமாரை அறிமுகப் படுத்தி அமராவதி இயக்கினார். அதன்பிறகு கர்ணா, புதையல், பூவேலி, உன்னருகே நானிருந்தால், ஜேம்ஸ்பாண்டு, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், நான் அவனில்லை, தோட்டா போன்ற வெற்றிப் படங்களான 25படங்களுக்கு மேல் டைரக்ட் செய்துள்ளார். இப்போது அரவிந்த் சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தை இயக்கி முடித்துள்ளார்.