முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டைரக்டர் கே.பாக்யராஜ் வாழ்த்து தெரிவித்து அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மரியாதைக்குரிய தமிழக முதல்வர் மு.க்.அஸ்டாலின் மற்றும் தங்களுடன் பொறுபேற்றிருக்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பணிவன்பான வணக்கத்துடனும் வாழ்த்துக்களுடனும் உங்கள் பாக்யராஜ் எழுதுவது.
பொறுத்தார் பூமி ஆள்வார். ஆனாலும் பொறுப்பு தங்களை தேடி வர அப்பாவின் ஆசி கனிந்துள்ளது. அதைவிட தங்களது தன்னம்பிக்கையும். தளராத உழைப்புமே மிக மிக உன்னதமென என் மனம் நெகிழ்கிறது. தேர்தல் முடிவு வந்ததுமே சந்தித்து வாழ்த்த நினைத்தேன். ஆனால் எனக்கிருந்த நோயின் அறிகுறி, சளித் தொல்லை காரணமாக தங்களை அசவுகரிப்படுத்த விரும்பாது தவிர்த்தேன் இப்போது அதிகாரபூர்வமாக தொற்று உறுதியானதால் காலதாமதமின்றி கடிதம் மூலமாவது வாழ்த்துகிறேன்.
தமிழ் சமுதாயத்தை சீரமைக்கும் சிறப்பான சேவைப்பணியாறிய அப்பாவின் எழுத்தணியுடன் அன்பு மகனான தாங்கள் அனைத்து தமிழக தாய்மார்களின் சுமை குறைத்து கரோனா நோயாளிகளின் துயர் துடைக்கும் பொருட்டும் நிறைவான பால் வார்த்து விட்டீர்கள். குறைவான விலையில் நெகிழ்வாக இருந்தது. காவல் துறை நண்பர்கள் குறித்தும் கருணையுடன் பரிசீலித்திருக்கிறீர்கள். மகிழ்வு.
என் குடும்பத்தார், பாக்யா குடும்பத்தினர் மற்றும் எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகிறேன். நிறைவான ஆட்சி அரங்கேறி, நாடு நலம் பெற அப்பாவின் அருள் உடனிருக்கும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு இயக்குனர் கே.பாக்யராஜ் கூறிஉள்ளார்.