மத்தியில் மோடி தலையிலான அரசு ஆட்சி பொறுப்பில் உள்ளது. சில மாதங்களுக்கு முன் வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தல் நிறைவேற்றப்பட்டன. அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்க டெல்லியில் போராட்டம் தொடங்கினார். பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து வந்த பல்லாயிரக் கணக்கன விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர்கள் அணிவகுப்பு நடக்கும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து ஜனவர் 26ம் தேதி டிராக்டர் பேரணி நடைபெற்றது. அனுமதிக்கப்பட்ட சாலைகள் தவிர மற்ற சாலைகளிலும் டிராக்டர் அணிவுகுப்பு நடந்தது. அதனை போலீஸார் தடுத்தனர். இதில் வன்முறை வெடித்தது. கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் விவசாயிகளை போலீசார் விரட்டி அடித்தனர். இதில் ஒரு விவசாயி மரணாம் அடைந்தார்,
போலீசாரின் தாக்குதலுக்கு விவசாயிகள் எதிர்தாக்குதல் நடத்தினர். விவசாயிகள் சிலர் போலீசாரை வாளால் வெட்டியதாகவும், கொடி கட்டிய கம்பால் தாக்கியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த கலவரத்தால் டெல்லியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. நேற்று நடந்த இந்த கவரத்தில் ஏராளமான விவசாயிகளும், 300க்கும் மேற்பட்ட போலீசாரும் காயம் அடைந்தனர். கலவரம், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளது.
200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 விவசாய தலைவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெல்லி செங்கோட்டையிலும் புகுந்தனர். அங்கு சீக்கியர்களின் புனித கொடியை ஒருவர் ஏற்றினர். கலவரத்துக்கு அரசுதான் காரணம் அவர்கள் அனுப்பிய நபர்கள்தான் கலவரத்தில் ஈடுபட்டனர். டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றியது பா ஜ எம்பிக்கு நெருக்கமான ஒரு நடிகர்தான் என விவசாயிகள் சங்க தலைவர்கள் கூறினர்.
விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் இந்நிலையில் டெல்லி போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய கிஷான் பாரதிய கிசான் யூனியனின் (பானு) தலைவர் தாக்கூர் பானு பிரதாப் சிங் கூறுகையில், . எங்கள் 58 நாள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன் என்றார்.
இதற்கிடையில் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றியது நடிகர் தீப் சித்து என்பது தெரியவந்துள்ளது. மூவர்ண கொடியை அகற்றாமல் விவசாயிகள் போராட்டதை அறிவிக்கும் வகையில் சீக்கிய புனித கொடியை ஏர்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.