Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒ டி டி தளத்தில் நேரடியாக ரிலீசான டியர் ஜீவா

தி காம்ரேட் பிலிம்ஸ் சார்பில் J சகாய சதீஷ் மற்றும் சையது ஒமர் முக்தார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டியர் ஜீவா’. பிரகாஷ் வி பாஸ்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

லப்பர் பந்து, பாம் என சமீபத்தில் வெளியான வெற்றிப் படங்களில் கவனம் ஈர்த்த நடிகர் விஜய் டிவி புகழ் டிஎஸ்கே (TSK) இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக தீப்ஷிகா நடிக்க, முக்கிய வேடங்களில் மனிஷா ஸ்ரீ, கலக்கப்போவது யாரு யோகி, லொள்ளு சபா உதய், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் பேரனும் மோகன் நடித்த ‘ஹரா’ படத்திற்கு இசையமைத்தவருமான ரஷாசாந்த் அர்வின் இசையமைக்க, அரவிந்த் செல்வராஜ் மற்றும் சஞ்சீவ் கண்ணா இருவரும் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ராஜா ஆறுமுகம் கவனித்துள்ளார்.

இந்த படம் டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகியுள்ளது.

இயக்குநர் பிரகாஷ் வி.பாஸ்கர் அருண்ராஜா காமராஜிடம் துணை இயக்குநராக கனா படம் முதல் லேபிள் வெப் சீரிஸ் வரை பணியாற்றியுள்ளார்..

‘மை எக்ஸ்ட்ரார்டினரி லவ் ஸ்டோரி’ என்கிற வெப் சீரிஸையும் இயக்கியுள்ளார். மேலும் 100 க்கும் மேற்பட்ட சுயாதீன பாடல்களை எழுதியுள்ளதுடன் நான்கு குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

அது மட்டுமல்ல தனது படைப்புகளுக்காக 14 சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.
.
‘டியர் ஜீவா’ திரைப்படம் உருவான விதம் குறித்தும் இந்தப் படத்தின் நேரடி ஒடிடி வெளியீடு குறித்தும் இயக்குநர் பிரகாஷ் வி.பாஸ்கர் கூறும்போது,

“இந்த படம் ஒரு உணர்ச்சி மிகுந்த காதல் கதை. குடும்பத்துடன் அமர்ந்து அனைவரும் பார்க்கும் விதமான ஒரு ரொமான்டிக் படமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத்தான் எங்களுக்கு விருப்பம். ஆனால் நாங்கள் இதில் குறைந்த அளவே முதலீடு செய்திருப்பதால் நிறைய பேரிடம் சென்று சேருவதற்காக நேரடியாக டென்ட் கொட்டகை ஓடிடி தளத்தில் இந்தப்படத்தை தீபாவளி வெளியீடாக ஒளிபரப்பு செய்துள்ளோம்.

படத்தின் நாயகன் டிஎஸ்கேவும் நானும் 15 வருட நண்பர்கள். நான் இயக்கிய எல்லா குறும்படங்களிலும் டிஎஸ்கே தான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த கதைக்கு பக்கத்து வீட்டு பையன் போன்ற ஒரு கதாபாத்திரத்திற்கு டிஎஸ்கே தான் தேவைப்பட்டார்.

ஏற்கனவே என்னுடைய குறும்படங்களில் அவர் நடித்திருந்ததாலும் அவரை பர்சனலாகவே எனக்கு நன்றாகத் தெரியும் என்பதாலும் இந்த கதைக்கு அவர் மிகச்சரியாக பொருந்துவார் என நம்பினேன்.

அவர் ஒரு மிமிக்ரி கலைஞர், நல்ல டான்சர்.. இதையெல்லாம் தாண்டி மனித உணர்வுகளை மிகச்சரியாக பிரதிபலிப்பவர் என்பதை நான் கவனித்து இருக்கிறேன். அதனால் இந்தக் கதையை அவர் சிறப்பாக பண்ண முடியும் என்று அவருக்காகவே பண்ணப்பட்ட கதை தான் இது.

இந்த படத்தின் படப்பிடிப்பை வெறும் 15 நாட்களில் நடத்தி முடித்தோம். மொத்த படப்பிடிப்பும் திருச்சியில் நடைபெற்றது..

படத்தின் கதாநாயகியாக நடித்துள்ள தீப்ஷிகா அடிப்படையில் ஒரு டாக்டர். இதுதான் அவருக்கு முதல் படம்.

அருண்ராஜா காமராஜூடன் இணைந்து கனா போன்ற பெரிய படங்களில் பணியாற்றிய போது அந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அந்த அனுபவம் இந்த படத்தில் எனக்கு ரொம்பவே கை கொடுத்தது. அதனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி விரைவாக நடத்தி முடிக்க முடிந்தது.

இந்த தீபாவளிக்கு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி உள்ள டீசல் திரைப்படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசாமியிடம் தான் முதன் முதலாக உதவி இயக்குநராகப் பணியாற்றினேன்.. தற்போது அவரது படமும் எனது படமும் ஒரே சமயத்தில் வெளியாவது மகிழ்ச்சி.

‘டியர் ஜீவா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லையே என்கிற வருத்தம் ஒரு இயக்குநராக எனக்குள் இருந்தாலும் கூட, நேரடியாக ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு வெளியாகிறது என்பதில் எனக்கும் படக்குழுவினருக்கும் சந்தோசம் தான்” என்று கூறினார்..

*நடிகர்கள்*

டி.எஸ்.கே (TSK), தீப்ஷிகா, மனிஷா ஸ்ரீ, கலக்கப்போவது யாரு யோகி, லொள்ளு சபா உதய், பிரியதர்ஷினி ராஜ்குமார்

*தொழிநுட்பக் கலைஞர்கள்*

கதை, பாடல் மற்றும் இயக்கம் ; பிரகாஷ் வி பாஸ்கர்

தயாரிப்பாளர் ; சகாய சதீஷ் J & சையது ஓமர் முக்தார்

இசை ‘ ரஷாந்த் அர்வின்

ஒளிப்பதிவு ; அரவிந்த் செல்வராஜ் & சஞ்சீவ் கண்ணா

படத்தொகுப்பு ; ராஜா ஆறுமுகம்

கலை இயக்கம் ; AR மோகன்

நடனம் ; பிரசன்னா

CG & VFX ; விஜய்சேகர் – கண்ணன்

விளம்பர வடிவமைப்பு ; ஜீவா

மக்கள் தொடர்பு ; A. ஜான்

Related posts

காந்தி டாக்ஸ் (பட விமர்சனம்)

Jai Chandran

பொன்னியின்செல்வன் ஜெயம்ரவி, கார்த்தி கேரக்டர்

Jai Chandran

ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend