Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ச ம க தலைவர் சரத்குமார் பொங்கல் தின வாழ்த்து

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத தலைவர் ரா. சரத்குமார் பொங்கல் தினத்தில் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

“பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற தமிழர்களின் முதுமொழிக்கேற்ப, மார்கழி மாதத்தின் இறுதி நாளான போகித் திருநாள் அன்று இல்லங்களை தூய்மை செய்து தேவையற்ற பழைய பொருட்களை நீக்குவது போல, மனதில் எழும் தேவையற்ற பயன்தராத சிந்தனைகளை நீக்கி, புதிய சிந்தனைகளுடன், பிறக்கும் தை மாதத்தை புத்துணர்வு, தன்னம்பிக்கை, மன உறுதி, நேர்மறையான எண்ணத்துடன் வரவேற்பதே போகி பண்டிகை யின் சிறப்பும், சாராம்சமும் ஆகும்.

”கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ் குடி” என்ற பெருமைக்குரிய நமது தமிழ் மக்களின் பாரம்பரிய, கலாச்சார திருவிழாவில் முதன்மையானது பொங்கல் திருவிழா.

பொங்கல் திருநாளில் முதல் நாள் விழாவாக, ஆடி மாதம் விளைத்த பயிரை அறுவடை செய்யும் மாதமான தை மாதத்தின் முதல் நாளில் வாசல்களில் வண்ணக் கோலமிட்டு, வாயில்களில் அலங்காரத் தோரணம் கட்டி, புதுப்பானை வைத்து, அறுவடையில் வீடுசேர்ந்த நெல்லின் புத்தரிசியில், வெல்லம், பால் இட்டு பொங்கி வரும் சமயம் “பொங்கலோ பொங்கல்” என ஆரவாரத்துடன் ஒலியெழுப்பி, விவசாயத்திற்கு துணை நிற்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் தமிழர்கள் நன்றியினை தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாள்.

இயற்கையோடு இணைந்த பெருவாழ்வு வாழும் தமிழ் மக்கள் உழவுக்கும், உழவனுக்கும் உறுதுணையாக திகழும் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் திருநாளை மாட்டுப் பொங்கலாக கொண்டாடு கிறார்கள். திசை எட்டும் தமிழர் களின் பெருமையையும், தமிழின் பெருமையையும் பறைசாற்றிய திருக்குறளைத் தந்த திருவள்ளு வரை போற்றி திருவள்ளுவர் தினம் கொண்டாடுகிறார்கள். மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக உழவர் தினம் கொண்டாடுகிறார்கள். இந்த அறுவடைத் திருநாளை மகர சங்கராந்தி, லோஹ்ரி, போகி, பிஹூ என இந்தியாவின் பல மாநிலங்களில் மக்கள் சீரும், சிறப்புமாக கொண்டாடுகிறார்கள்.

மனித இனம் உயிர்வாழ இன்றிய மையாத தேவையான உணவை உற்பத்தி செய்யும் வேளாண்மைத் தொழில், பருவநிலை மாற்றம், இயற்கைசீற்றங்கள், உர விலை யேற்றம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல காரணங்களால் உற்பத்தி சார்ந்த சவால்களையும், விளைச் சலுக்கு பிறகு குறைந்த சந்தை விலை நிர்ணயத்தால் பாதிப் படைந்து, வேளாண் வளர்ச்சியும், விவசாயிகளின் வாழ்க்கைத் தர வளர்ச்சியும் குறைந்து காணப்படுகிறது.

நல்ல தரம், அதிக உற்பத்தி, உரிய விலை என்ற அடிப்படையில் விவசாயத்தை பாதுகாத்து, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வேளாண் துறையை முன்னேற்றிட உறுதியேற்பது தான் பொங்கல் திருநாளில் விவசாயிகளுக்கு செலுத்தும் நன்றியாக இருக்கும்.

எனவே, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை கொள்கையான வீட்டுக்கொரு விவசாயியை உருவாக்க பாடுபடுவோம். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விவசாயத்தின் மேன்மையை எடுத்துரைப்போம். மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்க, இல்லங்கள் தோறும் இனிமை பொங்க, நாடு பசுமை யான வளத்துடன் செழித்தோங் கட்டும்.

தமிழ் இனத்தின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கு என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாகவும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கி  றேன்.

உழைப்பவரே உயர்ந்தவர்

இவ்வாறு ரா.சரத்குமார் கூறியுள்ளார்.

Related posts

Suresh Kamatchi to release Ameer’s ‘Uyir Thamizhukku’

Jai Chandran

Vijay’s ‘Varisu’ collects close to 300 crores

Jai Chandran

Pinikaankiren video song from  TheethumNandrum

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend