கொரோனா 2வது அலை இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்புகளை அதிகரித்திருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி போர்க்கால நடவடைக்கைகள் எடுத்து வருகிறார். சென்னையில் ஆய்வுப்பணிகளை மேற் கொண்ட அவர் நேற்று கோவை. சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து முடுக்கி விட்டார். அத்துடன் 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியையும் தொடங்கி வைத் தார். தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதிவரை ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையில் கருப்பு பூஞ்சை நோய் ஒரு சில மாநிலங்களில் பரவி வருகி றது. இதுவும்ம் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டி ருக்கிறது. பீகார், கேரளா, தமிழகத்தில் இந்நோய் சிலருக்கு கண்டறியப்பட்டு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளை பூஞ்சை நோயும் சிலருக்கு கண்டறியப்பட்டிருக்கிறது. கருப்பு பூஞ்சையைவிட வெள்ளை பூஞ்சை நோய் கொடியது என்று கூறப்படு கிறது. நீண்ட வருடமாக சர்க்கரை (நீரிழவு) நோயால் பாதித்தவர்கள், ஸ்டீரய்டு மருந்துவகைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு பூஞ்சை நோய் விரைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தோல், நகங்கள், வாயின் உட்புற பகுதி, வயிறு, குடல், இனப்பெருக்க உறுப்புகள், மூளை மற்றும் நுரையீரலில் வெள்ளை பூஞ்சை பாதிப்பை ஏற்படுத்துகிறது.
next post