Trending Cinemas Now
அரசியல் தமிழ் செய்திகள்

கொரோனா பரவல்: அரசு புதிய கட்டுப்பாடு அறிவிப்பு

 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.   பரவலை  கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண் டுள்ளது.   அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆராய நேற்று தலைமைச் செயல கத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இது குறித்து
தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா பரவல் தடுக்க பல புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு தளர்ப்புகளுடன் புதிய  கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 10ம் முதல் தொடங்கி  ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இது  நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் பற்றி விவரம் வருமாறு :

*சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை கடைகள் மட்டும் 10-ஆம் தேதி முதல் இயங்க தடை.

*வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர் கள் மட்டுமே அனுமதி.

* மத வழிபாடு,  கோவில் திருவிழாக்களுக்கு தடை.

*மாவட்டங்களுக்கு இடையே யான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில்  பயணிகள் அமர்ந்து மட்டுமே பயணிக்க அனுமதிக்கப் படும். நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி கிடையாது.

*புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்து களில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே  பயணிக்க லாம்.  பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க கூடாது.

* வெளிமாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வர இ-பதிவு அவசியம்

*தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி.

* தேநீர் மற்றும் உணவகங் களில் 50 சதவீத மட்டுமே அனுமதி.

*ஆட்டோக்களில்  டிரைவர் மற்றும்  இரண்டு பயணிகள் மட்டுமே அனுமதி.

*திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே அனுமதி.
இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டும்  அனுமதி.

*முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகள் கட்டாயm

*அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து கடைகள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டுமே.  அனுமதி

*45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

*நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெறும்.

*சினிம சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்போர்  தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும், கொரோனா பரிசோதனை செய்வது அவசியம்.

*வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  தொழிற் சாலைகள் இயங்க அனுமதி.

*நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி.

இவ்வாறு புதிய கட்டுப்பாடு கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசின் இந்த கட்டுப்பாடு களுக்கு வியாபாரிகள்,  தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந் துள்ளது.

Related posts

ரன்பிர்- ராஷ்மிகா அனிமல் பட டிக்கெட் முன்பதிவு வேகம்

Jai Chandran

செம்பி படகுழுவினரை வாழ்த்திய கமல்ஹாசன்

Jai Chandran

தயாரிப்பாளர்கள் சங்கம் ரூ.10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதி: உதயநிதியிடம் அளிப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend