Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முத்தரசன் நடிப்பில் இளையராஜா இசையில் “அரிசி”

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகும் திரைப்படம் “அரிசி”மோனிகா புரடக் ஷன்ஸ் சார்பில் பி சண்முகம் தயாரிக்கிறார்.

இதில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் விவசாயியாக நடிக்கிறார்.  அவரது மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். இவர்களுடன் சிசர் மனோகர்,
கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ்,
மகிமை ராஜ்,வையகன்,
அன்பு ராணி, சுபா, பழனி மணி சேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்

ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அசோக் சார்லஸ் எடிட்டிங் செய்கிறார்.

சேது ரமேஷ் அரங்கம் அமைக்கிறார்.

மகேந்திர பிரசாத் இணைத் தயாரிப்பு செய்கிறார்.

பிரபல இயக்குனர்களிடம் பணியாற்றிய எஸ்.ஏ.விஜயகுமார்
கதை, திரைக்கதை,வசனம்  எழுதி இயக்குகிறார்.

அரிசி படம் பற்றி  இயக்குனர்
எஸ் . ஏ.விஜயகுமார்
கூறியதாவது:

அரிசி படம் முழுக்க முழுக்க விவசாய பின்னணியில் உருவாகும் படம்.
அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல!
மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை இத்தலைமுறைக்கு எடுத்து சொல்வதே இந்த *”அரிசி”* படத்தின் சிறப்பு!

இப்படத்தில்  விவசாயியாக நடித்திருக்கும் தோழர்
இரா. முத்தரசன்
அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்.   இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் குடவாசல்  அருகே உள்ள சிறு  சிறு கிராமங்களில் 35 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது.  அப்பகுதி விவசாயிகளும்  இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இவ்வாறு இயக்குனர்
எஸ். ஏ விஜயகுமார் கூறினார்.

Related posts

திரௌபதி தேவி பாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரக்ஷனா..

Jai Chandran

Dulquer Salmaan #DQ41 Officially announced

Jai Chandran

ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ இறுதிக்கட்ட ஷூட்டிங்’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend